ஊழல் செய்கிற படத்தில் ஊழலை எப்படி ஒழிக்க முடியும்? இந்தியன் 2 படத்தை வெளுத்து வாங்கிய பிரபலம்
நேற்று அனைவரும் எதிர்பார்த்து இருந்த இந்தியன் 2 திரைப்படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆனது. படத்தை பற்றி பல விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. இதில் இந்தியன் 2 திரைப்படத்தை பற்றி பிரபல மூத்த பத்திரிக்கையாளர் பாண்டியன் அவருடைய கருத்தை தெரிவித்திருக்கிறார்.
அதாவது இந்தியன் படத்தின் முதல் பாகத்தை பொருத்த வரைக்கும் தமிழ்நாட்டு அரசியல் ஊழலை பற்றி கூறியிருந்தார்கள். ஆனால் இந்தியன் 2 திரைப்படத்தை பொருத்தவரைக்கும் இந்தியா முழுக்க ஊழல், அதிகாரிகள் ஊழல், யார் ஊழல் செய்கிறார்கள் அந்த ஊழலை எப்படி தடுப்பது? மாநில அரசால் மத்திய அரசா?
மத்திய அரசாங்கம் ஊழல் என்றால் அதிகாரிகளை இயக்குகின்ற அரசாங்கத்தின் பங்கு என்ன என்பதைப் பற்றி கமல் ஷங்கர் லைக்கா இந்த படத்தில் ஏன் சொல்லவில்லை என்ற கேள்வியை பாண்டியன் கேட்டிருக்கிறார்.
இந்தியன் படத்தின் முதல் பாகத்தில் மாநில அரசை பற்றி அதாவது ஆர்டிஓ பிடிஓ இங்கு நடக்கும் ஊழலை இந்தியன் தாத்தா வந்து தடுப்பது ஊழலை ஒழிப்பது என்பது மாதிரி எடுத்து இருந்தார்கள். அது நல்ல படம். பெரிய அளவில் ஹிட்.
ஆனால் இந்தியன் 2 படத்தில் அந்த மாதிரி விஷயங்கள் எதுவுமே இல்லையே. இப்போது ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் கமல் அதாவது மக்கள் நீதி மையம் கட்சி என்ற கட்சிக்கு தலைவராக இருக்கிறார். மக்கள் நீதி மையத்த்தில் நீதி என்பது நீதிமன்றத்தில் இல்லை. மக்களிடம் தான் இருக்கிறது என்று சொன்ன கமல் இந்த படத்தில் யாரைப் பார்த்து பயப்படுகிறார் என்று தான் தெரியவில்லை.
அரசியல்வாதிகள் ஒழுங்காக இருந்தால் அதிகாரிகளை ஒழுங்காக வேலை வாங்க முடியும். ஆனால் இரண்டு பேருமே அசட்டையாக இருக்கும் பட்சத்தில் என்ன செய்ய முடியும்? இதை அந்த படத்தில் காட்டுகிறார்களா என்றால் இல்லை. ஊழல் செய்கிற படத்திலேயே ஊழலை எப்படி ஒழிக்க முடியும்?
கமலுக்கு 100 கோடி சம்பளம், ஷங்கருக்கு 100 கோடி சம்பளம், பட்ஜெட் 250 கோடி. ஜென்டில்மேனில் ஷங்கர் கையாண்ட அந்த கதையின் வீரியம் இந்த படத்தில் இல்லையே. வறுமையின் நிறம் சிவப்பு படத்தில் வறுமையை ஒழிப்பதற்கு கமல் சொன்ன கருத்து கூட இந்த படத்தில் இல்லையே.
எல்லா கட்சி கொடிகளும் கள்ளுக்கடை காசுல தான்டா நடக்குது என்று சொன்ன கமல் எங்கே போனார்? இன்று காரசாரமான கருத்தை வெளியிட்டு இருக்கிறார் பாண்டியன்.