Cinema News
மங்காத்தா விநாயக்கை விடாமுயற்சியில் பழி வாங்கிய கயல்.. இது வேறலெவல் திங்கிங்!…
Vidaamuyarchi: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித், திரிஷா, அர்ஜூன், ஆரவ் உள்ளிட்ட பலரும் நடித்து உருவான விடாமுயற்சி திரைப்படம் கடந்த 6ம் தேதி உலகமெங்கும் வெளியானது. அஜித்தின் துணிவு படம் வெளியாகி 2 வருடங்கள் ஆகிவிட்டதால் அஜித்தை திரையில் காண அவரின் ரசிகர்கள் ஆர்வமாக இருந்தார்கள்.
பிரேக் டவுன்: இந்த படம் உருவாகும்போது படக்குழு எந்த அப்டேட்டும் கொடுக்கவில்லை. ஆனால், இந்த படம் 1997ம் வருடம் ஹாலிவுட்டில் வெளிவந்த பிரேக் டவுன் என்கிற படத்தின் ரீமேக் என செய்திகள் வெளியே கசிந்தது. இந்த படத்தின் முழுப்படப்பிடிப்பும் அஜர்பைசான் நாட்டில் நடந்தது.

அஜித்துக்கு மனைவியாக திரிஷா நடிக்கிறார், வில்லனாக அர்ஜுன் நடிக்கிறார் என சொல்லப்பட்டது. அதன்பின் அஜித் வேகமாக ஜீப்பை ஓட்டி அது கீழே கவிழ்ந்து விபத்துக்குள்ளான வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்கள். பொங்கலுக்கு ரிலீஸ் என அறிவித்து அது நடக்காமல் போய் கடந்த 6ம் தேதி படம் வெளியானது.
எதிர்மறை விமர்சனம்: ஆனால், இந்த படம் ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை. அஜித்திடம் அவரின் ரசிகர்கள் எதிர்பார்க்கும் எந்த விஷயமும் படத்தில் இல்லை. அதோடு, டிவிஸ்ட்டோடு கூடிய சுவாரஸ்யமான திரைக்கதையும் படத்தில் இல்லை. எனவே, படத்தை பார்த்த ரசிகர்கள் நெகட்டிவாகவே பேசினார்கள்.

விடாமுயற்சி வசூல்: 2 நாளில் சேர்த்து இப்படம் 34 கோடியை மட்டுமே இப்படம் வசூல் செய்து பாக்ஸ் ஆபிசில் தோல்வி அடைந்துள்ளது. சனி, ஞாயிறு இரண்டு நாட்களுக்கு பின் தியேட்டர்களில் காத்து வாங்கும் என்றே கணிக்கப்படுகிறது இந்த படத்தில் அஜித்தின் மனைவி கயல் என்கிற வேடத்தில் திரிஷா நடித்திருக்கிறார். திடீரென அவர் கடத்தப்படுகிறார். அஜித் அவரை தேடி அலைகிறார். ஆனால், இன்னொருவருடன் கள்ளக்காதலில் ஈடுபட்டிருக்கும் திரிஷா திட்டமிட்டே அதை செய்திருக்கிறார் என்பது அஜித்துக்கு தெரிய வருகிறது. இதுதான் படத்திற்கு பெரிய மைனஸ் ஆகிவிட்டது.
இந்நிலையில், இதை கையில் எடுத்த நெட்டிசன்கள் ‘அன்று 500 கோடி பணத்திற்காக காதலிப்பது போல நடித்து ஏமாற்றிவிட்டு சென்ற விநாயக்கை இன்று கயலாக வந்து பழிதீர்த்துவிட்டார் திரிஷா’ என பதிவிட்டு வருகிறார்கள். அதாவது மங்காத்தா படத்தில் அஜித் நடித்த கதாபாத்திரத்தோடு விடாமுயற்சியை ஒப்பிட்டு மீம்ஸ்களை உருவாக்கி வைரலாக்கி வருகின்றனர்.