தனுஷ் கைவிட்டுட்டாரு ஜீவியாச்சும் காப்பாற்றுவாரா?.. சைந்தவி கொடுத்த சிக்னல்.. நடந்தா சரி..!

by ramya suresh |
தனுஷ் கைவிட்டுட்டாரு ஜீவியாச்சும் காப்பாற்றுவாரா?.. சைந்தவி கொடுத்த சிக்னல்.. நடந்தா சரி..!
X

பிரபலங்களின் விவாகரத்து:

இன்றைய சூழலில் விவாகரத்து என்பது தொடர்ந்து அதிகரித்து வருகின்றது. அதுவும் சினிமாவில் நடிகர், நடிகைகள் திடீர் திடீரென்று தங்களது விவாகரத்து அறிவிப்பை வெளியிடுவது அவரின் ரசிகர்களுக்கு மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கின்றது. அதிலும் பல வருடங்கள் ஒன்றாக சேர்ந்து தங்களின் வாழ்க்கைக்கு அடையாளமாக குழந்தைகளை பெற்றுக் கொண்ட பிறகு விவாகரத்து அறிவிக்கிறார்கள்.

தனுஷ் ஐஸ்வர்யா விவாகரத்து:

தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் இருக்கும் நிலையில் கிட்டத்தட்ட 20 ஆண்டுகள் கழித்து இருவரும் பிரிவதாக அறிவித்திருந்தார்கள். இதையடுத்து விவாகரத்து கோரி நீதிமன்றத்திற்கு சென்றார்கள். எப்படியும் இவர்கள் இருவரின் மனம் மாறிவிடும் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்தார்கள்.

மேலும் இரு வீட்டார் தரப்பில் இருந்தும் தனுஷ் மற்றும் ஐஸ்வர்யாவை சேர்த்து வைப்பதற்கு அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டது. ஆனால் அது பயனில்லாமல் போனது. இந்த சம்பவம் தனுஷ் ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இவர்கள் இருவரும் விரைவில் இணைந்து விடுவார்கள் என்று இருந்த நம்பிக்கையுடன் இருந்து வந்தார்கள். ஆனால் அது வீணாக போனது.

ஜிவி பிரகாஷ் சைந்தவி விவாகரத்து:

தமிழ் சினிமாவில் பிரபல இசையமைப்பாளராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஜிவி பிரகாஷ். இவரது மனைவி சைந்தவி. பள்ளி பருவத்திலிருந்து இருவரும் காதலித்து வந்த நிலையில் பின்னர் பெற்றோர் சம்பந்தத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்த தம்பதிகளுக்கு ஒரு அழகிய பெண் குழந்தை இருக்கின்றது. இந்நிலையில் சமீபத்தில் இவர்கள் இருவரும் தாங்கள் பிரிவதாக அறிவித்திருந்தார்கள். இந்த அறிவிப்பு ரசிகர்களிடையே மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.

ஜிவி பிரகாஷ் இசை நிகழ்ச்சி:

இசையமைப்பாளர் ஜீவி பிரகாஷ் சமீபத்தில் மலேசியாவில் இசை நிகழ்ச்சி ஒன்றை நடத்தி இருந்தா.ர் இந்த நிகழ்ச்சியில் அவரின் முன்னாள் மனைவி சைந்தவி பாடல்களை பாடியிருந்தார். இது தொடர்பான வீடியோக்கள் இணையதள பக்கத்தில் வெளியாகி மிகுந்த வரவேற்பை பெற்றது. இதை பார்த்த பலரும் வீடியோவை பார்த்து அழுதுவிட்டார்கள். என்ன வாழ்க்கையா இது? என்று புலம்பி இருந்தார்கள்.

இந்நிலையில் தற்போது புது வீடியோ ஒன்று வைரலாகி வருகின்றது. அதாவது இசை நிகழ்ச்சிக்காக ஜிவி பிரகாஷ் மேடையில் பயிற்சி செய்து கொண்டிருந்தார். அப்போது சைந்தவி அவரது மகளை அங்கு அனுப்பி வைக்கின்றார். அதை பார்த்தவர்கள் இந்த ஜோடி மீண்டும் சேர்வதற்கு நிறைய வாய்ப்பு இருக்கின்றது. பொதுவாக ஒருவரை ஒருவர் விவாகரத்து செய்த பிறகு முகத்தில் முழிக்க கூட விரும்ப மாட்டார்கள். ஆனால் ஜீவி பிரகாஷும் சைந்தவியும் அப்படி இல்லை.

தற்போது வரை தங்களின் திருமண புகைப்படங்கள் மற்றும் அவர்கள் ஒன்றாக எடுத்துக் கொண்ட புகைப்படங்களை சமூக வலைதள பக்கத்திலிருந்து நீக்காமல் இருந்து வருகிறார்கள். திருமணமாகி 11 வருடங்கள் கழித்து பிரிவை அறிவித்த போதிலும் மீண்டும் அவர்களுக்குள் காதல் பிறக்க வாய்ப்பிருக்கின்றது. ஜீவி பிரகாஷும் சைந்தவியும் மீண்டும் தங்களது வாழ்க்கையை இணைந்து ஆரம்பிக்க வேண்டும் என்பது ரசிகர்களின் ஆசையாக இருந்து வருகின்றது.

Next Story