இந்த லட்சணத்துல இளையராஜா பயோபிக் வேறயா?!.. தனுஷை வச்சி செய்யும் ரசிகர்கள்!...
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான திரைப்படம் ராயன். இது தனுஷின் 50வது திரைப்படம். சன் பிக்சர்ஸ் இயக்க தனுஷே இப்படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் தனுஷுன் தம்பியாக காளிதாஸ் ஜெயராமனும், சந்தீப் கிஷனும் நடித்திருக்கிறார்கள். தனுஷின் தங்கையாக துஷரா விஜயனும் நடித்திருக்கிறார்கள்.
இரண்டு கேங்ஸ்டர் கும்பலுக்கு இடையே சிக்கும் இவர்கள் என்ன ஆகிறார்கள் என்பதுதான் படத்தின் கதை. பாட்ஷா, வட சென்னை, அசுரன் என எல்லாவற்றையும் கலந்து கட்டி ஒரு கதை எழுதி இருக்கிறார் தனுஷ். பாட்ஷா படத்தில் இருந்த அதே பில்டப் இந்த படத்திலும் இருக்கிறது. பல காட்சிகள் அப்படத்தை நினைவு படுத்துகிறது.
பில்டப் மற்றும் ரத்தம் தெறிக்கும் காட்சிகள் இருந்தால் படம் ரசிகர்களை கவர்ந்து ஹிட் அடிக்கும் என தனுஷ் நம்பியிருக்கிறார் என்பது படம் பார்க்கும் நமக்கு புரிகிறது. படத்தை பார்த்த பலரும் படத்தில் கதை என ஒன்றுமில்லை. அதிலும் படத்தின் இரண்டாம் பாதி போரடிக்கிறது.
படத்தில் அழுத்தமான கதை இல்லை என்பதால் காட்சிகளில் ஒன்ற முடியவில்லை என்றே பலரும் சொல்கிறார்கள். ஒரு பெண்ணை பலரும் சேர்ந்து கற்பழிக்கிறார்கள் என்பதெல்லாம் 80களில் வந்த காட்சிகள் இந்த படத்தில் தனுஷ் அதை காட்டுகிறார். அதோடு, அண்ணனுக்கு எதிராக தம்பிகள் இருவரும் வில்லன் பக்கம் போவார்கள். அதற்கு அழுத்தமான காரணமே இல்லை.
மேலும், தங்கை கற்பழிக்கப்பட்டது பற்றி கூட அவர்களுக்கு கவலையில்லை என்பதெல்லாம் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை. படத்தின் பல இடங்களிலும் லாஜிக் இல்லை. ஏ.ஆர்.ரஹ்மான் பின்னணி இசை மட்டும் சிறப்பாக இருப்பதாக பலரும் சொல்கிறார்கள். தனுஷை சமூகவலைத்தளங்களில் பலரும் நக்கலடித்து வருகிறார்கள்.
சிலரோ ‘இந்த அருண்மாதேஸ்வரனோட சேர்ந்து நீ எப்படி ஆயிட்ட பாத்தியா.. இந்த லட்சணத்துல நீங்க ரெண்டு பேரும் சேர்ந்து இளையராஜாவோட சுயசரிதைய வேற எடுக்க போறீங்களா? என்ன பண்ணி வைக்க போறீங்களோ?’ என பதிவிட்டு வருகிறார்கள்.