Categories: latest news

வெற்றிமாறன் மட்டும் சிரிக்கல? யாரும் வாங்கியிருக்க மாட்டாங்க.. ஹிட் கொடுத்த அந்தப் படம்

மிழ் சினிமாவில் ஒரு தவிர்க்க முடியாத இயக்குனராக மாறி இருப்பவர் வெற்றிமாறன். தனுஷை வைத்து தொடர்ந்து ஐந்து படங்களை இயக்கி தனுஷையும் ஒரு உயர்ந்த இடத்தில் வைத்து அழகு பார்த்தவர். இன்று ஹாலிவுட் பாலிவுட் என எல்லா சினிமாக்களிலும் தனுஷுக்கு அங்கீகாரம் கிடைக்கிறது என்றால் அதற்கு வெற்றிமாறன் போட்ட விதை என்று சொல்லலாம். பொல்லாதவன் படத்தில் தொடங்கி தொடர்ந்து திறமையான கதை களத்தில் தனுஷை நடிக்க வைத்து ஒரு நடிப்பு அசுரனாக மாற்றியவர் வெற்றிமாறன். இந்த நிலையில் அடுத்து வடசென்னை படத்தின் இரண்டாம் பாகத்தையும் எடுக்கும் முயற்சியில் வெற்றிமாறன் இருக்கிறார்.

அதற்கு முன்னதாக சிம்புவை வைத்து ஒரு படத்தை எடுக்கப் போகிறார். அந்த படம் ஜூலை மாதத்தில் ஆரம்பிக்கப்படும் என சொல்லப்படுகிறது. விடுதலை படத்திற்கு பிறகு சூர்யாவை வைத்து வாடிவாசல் திரைப்படத்தை எடுப்பதாக தான் இருந்தார் வெற்றிமாறன். ஆனால் சூர்யா வெங்கி அட்லூரி இயக்கத்தில் பிசியாக இருப்பதால் அதற்குள் சிம்புவை வைத்து படத்தை எடுத்து விடலாம் என சிம்பு பக்கம் திரும்பி இருக்கிறார் வெற்றிமாறன்.

பல முன்னணி நடிகர்களை வைத்து படத்தை எடுக்கும் முயற்சியிலும் இருந்து வருகிறார். ரஜினிக்கும் ஒரு கதை சொல்லி இருப்பதாக தகவல் வெளிவந்திருக்கின்றன. தனுஷ் சூர்யா சிம்பு ரஜினி என மாஸ் நடிகர்களுடன் தனது அடுத்தடுத்த படைப்புகளை கொடுக்க காத்திருக்கிறார் வெற்றிமாறன் .இந்த நிலையில் ராம் இயக்கத்தில் பறந்து போ என்ற படம் வரும் ஜூலை நான்காம் தேதி ரிலீஸ் ஆக இருக்கின்றது. ராமும் வெற்றிமாறனும் பாலு மகேந்திராவின் பள்ளியிலிருந்து வந்தவர்கள். இருவரும் நல்ல நண்பர்கள். பறந்து போ திரைப்படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சியில் ராம் மற்றும் வெற்றிமாறன் இருவரும் பல விஷயங்களை பகிர்ந்திருந்தனர் .

அப்போது ராம் ஒரு சுவாரசியமான தகவலை அந்த பேட்டியில் கூறியிருந்தார். அதாவது பா ரஞ்சித் முதன் முதலில் இயக்குனராக அறிமுகமான திரைப்படம் அட்டகத்தி .அந்தப் படம் எப்பேர்பட்ட வெற்றியை பெற்றது என அனைவருக்கும் தெரியும். தினேஷுக்கும் அதுதான் முதல் திரைப்படம் .தனது எதார்த்தமான நடிப்பை வழங்கியதன் மூலம் முதல் படத்திலேயே அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார் தினேஷ். ஆனால் அந்த படத்தை முதலில் வாங்க யாரும் முன் வரவில்லையாம் .அதன் பிறகு ஒரு பிரீமியர் ஷோ ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாம்.

அதில் வெற்றி மாறனும் உட்கார்ந்து அந்த படத்தை பார்த்திருக்கிறார் .படத்தைப் பார்த்து ஆரம்பத்தில் இருந்து இறுதி வரைக்கும் சிரித்துக்கொண்டே இருந்தாராம் வெற்றிமாறன். அதை பார்த்தவர்கள் வெற்றிமாறனே சிரித்து விட்டார் என அந்த படத்தை வாங்க முன் வந்தார்களாம். பின்னாளில் அந்த படம் எவ்வளவு பெரிய ஹிட் ஆனது என அனைவருக்கும் தெரியும். இந்த சம்பவத்தை பற்றி வெற்றிமாறன் கூறும்பொழுது அட்டகத்தி திரைப்படத்தை பொருத்தவரைக்கும் அதில் காட்டப்பட்ட காட்சிகள் என்னோட வாழ்க்கையில் பின்னி பிணைந்ததாக அதுவும் சென்னையில் வாழ்ந்த வாழ்க்கையை படம்பிடித்து காட்டியதாகவே நான் பார்த்தேன்.

attakathi

அதனால் தான் மகிழ்ச்சியில் சிரித்துக்கொண்டே படத்தை பார்த்தேன். அதன் பிறகு அந்த படத்தை வாங்கிய ஞானவேல் என்னிடம் உன்னாலதான்யா படத்தை வாங்கி இருக்கிறேன் என கூறிவிட்டு சென்றார் என்று வெற்றிமாறன் அந்த பேட்டியில் கூறினார்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

5 hours ago

கலைஞர் குடும்பத்தை பார்த்து அரசியலுக்கு வர ஆசைப்பட்ட விஜய்!.. பிடி செல்வகுமார் ஓபன்..

நடிகர் விஜய் இப்போது அரசியல்வாதியாக மாறியிருக்கிறார். அவரின் தமிழக வெற்றிக் கழகம் விரைவில் சட்டமன்ற தேர்தலில் சந்திக்கப்போகிறது. அரசியல்வாதியாக விஜய்…

8 hours ago

அரசன் படத்துக் கதை இதுதாங்க… சிவகார்த்திகேயன் படத்தோடு சிம்பு மோதுகிறாரா?

நடிகர் சிம்பு தற்போது நடித்து வரும் அரசன் படத்தை வெற்றி மாறன் இயக்கி வருகிறார். அனிருத் இசை அமைத்துள்ளார். இதே…

9 hours ago

இயக்குனர் பாரதிராஜா எப்படி இருக்கிறார்?!.. வெளியான போட்டோ!…

பதினாறு வயதினிலே திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் ஒரு புரட்சியை ஏற்படுத்தியவர் பாரதிராஜா. அதன்பின் தொடர்ந்து பல திரைப்படங்களை இயக்கி…

24 hours ago

யோகிபாபுவின் அட்ராசிட்டி!.. கண்டிக்காத ரஜினி!.. ஜெயிலர் 2 ஷூட்டிங்கில் நடந்தது என்ன?..

தமிழ் சினிமாவில் தற்போது விவேக் இல்லை. கவுண்டமணி நடிப்பதில்லை.. வடிவேலுக்கு ரிட்டயர்ட் ஆகும் வயதாகிவிட்டது. அதோடு, அவரின் காமெடியும் எடுபடவில்லை.…

1 day ago

Siragadikka Aasai: ரோகிணிக்கு செம செக் வைத்த முத்து, மீனா… இதாவது ஜெயிக்குமா?

Siragadikka aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரின் இன்றைய எபிசோட்டில் ரோகிணிக்கு எதிராக சரியான காயை…

1 day ago