Categories: latest news

நாளை 5 படங்கள் ரிலீஸ்!.. விஜய் ஆண்டனிக்கு ஹிட் கொடுக்குமா மார்கன்?!…

New Movie Release: ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புதுப்படங்கள் வெளியாகி வருகிறது. சில பெரிய நடிகர்களின் படங்கள் வியாழக்கிழமைகளிலும் வெளியாகும். போனவாரம் வெள்ளிக்கிழமை தனுஷின் குபேரா படம் வெளியானது. தமிழகத்தில் இப்படத்திற்கு வசூல் இல்லை என்றாலும் ஆந்திராவிலும், வெளிநாடுகளிலும் இப்படம் நல்ல வசூலை பெற்று வருகிறது. இதுவரை இப்படம் 100 கோடி வசூல் செய்துவிட்டதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில், இந்த வாரம் அதாவது ஜூன் 27ம் தேதியான நாளை என்னென்ன படங்கள் வெளியாகிறது என பார்ப்போம் வாருங்கள்: விஜய் ஆண்டனியின் மார்கன் படம் நாளை வெளியாகவுள்ளது. இசையமைப்பாளராக இருந்து நடிகரானவர் இவர். துவக்கத்தில் தொடர் ஹிட்டுக்களை கொடுத்தாலும் இடையில் இவரின் படங்கள் ஓடவில்லை.

பிச்சைக்காரன் 2 ஹிட்டுக்கு பின் கொலை, ரத்தம், ரோமியோ, மழை பிடிக்காத மனிதன், ஹிட்லர் ஆகிய படங்கள் வெளியானது. ஆனால், எந்த படமும் ஓடவில்லை. எனவே, எப்படியாவது ஒரு ஹிட் படத்தை கொடுத்துவிட வேண்டும் என்கிற நிலையில் இருக்கிறார். நாளை வெளியாகும் மார்கன் படத்தை லியோ ஜான் பால் இயக்கியுள்ளார். விஜய் ஆண்டனி இப்படத்தை தயாரித்து, இசையும் அமைத்திருக்கிறார். கிரைம் திரில்லர் படமாக மார்கன் உருவாகியுள்ளது. இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளிலும் வெளியாகவுள்ளது.

அடுத்து விக்ரம் பிரபுவின் லவ் மேரேஜ் படமும் நாளை வெளியாகிறது. விக்ரம் பிரபுவுக்கும் பல வருடங்களாக வெற்றிப்படம் அமையவில்லை. எனவே, இந்த படத்தை பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கிறார். சண்முக பிரியன் இயக்கியுள்ள இந்த படம் ஒரு நல்ல ஃபீல் குட் மூவியாக உருவாகியுள்ளது. பிரீமியர் ஷோ திரையிடப்பட்ட நிலையில் படத்திற்கு பாசிட்டிவான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

அடுத்து, தெலுங்கு பட மூத்த நடிகர் மோகன் பாபுவின் மகன் விஷ்ணு மஞ்சு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். மேலும், பிரபாஷ், அக்‌ஷய் குமார், மோகன்லால் ஆகியோர் கேமியோ வேடத்தில் நடித்திருக்கிறார்கள். பக்தி படமாக கண்ணப்பா உருவாகியுள்ளது. விஷ்ணு மஞ்சுவுக்கும் சரியான ஹிட் படம் அமையாத நிலையில் இந்த படத்தின் வெற்றிக்காக காத்திருக்கிறார். அடுத்து, திருக்குறள், குட் டே போன்ற சின்ன பட்ஜெட் படங்களும் நாளை வெளியாகவுள்ளது.

நாளை வெளியாகவுள்ள 5 படங்களில் எந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று ஹிட் அடிக்கும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

Sai Vikas

சாய் விகாஷ். இவர் டிஜிட்டல் செய்தி துறையில் துறையில் 15 ஆண்டுகள் அனுபவம் பெற்றவர். குறிப்பாக தமிழில் முன்னணி பத்திரிக்கைகளின் இணையதள் அசெய்தி பிரிவில் ஆசிரியராக பணியாற்றிய அனுபவம் கொண்டவர். சினிமா, அரசியல் சார்ந்த செய்திகள் வழங்குவதில் ஆர்வம் உள்ளவர் மின் அஞ்சல் முகவரி cinereportrs@gmail.com

Recent Posts

கௌசல்யாவைப் பார்த்து நானே ஜொள்ளு விட்டிருக்கேன்! – செல்வராகவன் கலகலப்பு!

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…

2 hours ago

மீண்டும் சீறும் தம்பி : கில்லி,படையப்பா வரிசையில் வசூலில் சாதனை படைக்குமா?

தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…

3 hours ago

நாளை மோதும் 4 முக்கிய படங்கள்

தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…

4 hours ago

குடைச்சல் கொடுக்கும் அனிருத்!.. சாய் அபயங்கரிடம் பலரும் போக இதுதான் காரணமா?…

கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…

5 hours ago

தூதுவிட்ட சிவகார்த்திகேயன்!.. No சொன்ன அஸ்வத் மாரிமுத்து!.. பார்ட்டி செம உஷார்!…

ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…

5 hours ago

ஆமாயா நான் திமிரு பிடிச்சவன்தான்!.. டென்ஷன் ஆன அஜித் தம்பி அனில் குமார்!…

நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…

11 hours ago