டிசம்பர் 20ம் தேதியை குறி வைக்கும் 5 படங்கள்!.. யார் யார் வராங்க தெரியுமா?...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:32  )

Viduthalai 2: ஒரு படம் உருவாவதை விட சரியான நேரம் பார்த்து ரிலீஸ் செய்வது முக்கியம். அதுவும், தொடர் விடுமுறை கிடைத்தால் வசூலை அள்ளிவிடலாம். அதனால்தான் தீபாவளி, பொங்கல் நேரங்களில் அதிக படங்கள் வெளியாகும். எல்லா நடிகர்களுமே தங்களின் படங்கள் தீபாவளி, பொங்கல், ஆயுதபூஜை போன்ற விடுமுறை நாட்களில் வெளியாக வேண்டும் என ஆசைப்படுவார்கள்.

ஆனால், எல்லோருக்கும் அப்படி படம் அமையாது. இந்த தீபாவளிக்கு கூட ரஜினி, கமல், அஜித், விஜய், சூர்யா, தனுஷ், சிம்பு ஆகியோரின் படங்கள் எதுவும் வெளியாகவில்லை. சிவகார்த்திகேயனின் அமரன், ஜெயம் ரவியின் பிரதர், கவினின் பிளடி பெக்கர் ஆகிய படங்கள் மட்டுமே வெளியானது.

மேலும், துல்கர் சல்மான் நடிப்பில் தெலுங்கில் உருவான லக்கி பாஸ்கர் படமும் வெளியானது. இதில், அமரன் படம் நல்ல வசூலை பெற்றது. அடுத்த இடத்தில் லக்கி பாஸ்கர் இருக்கிறது. அடுத்து நவம்பர் 17ம் தேதி சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள கங்குவா படம் வெளியாகிறது.

அடுத்து டிசம்பர் 20ம் தேதி நான்கைந்து படங்கள் வெளியாகும் என கணிக்கப்படுகிறது. விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் வெற்றிமாறன் இயக்கியுள்ள விடுதலை 2, தனுஷின் நடிப்பில் உருவாகியுள்ள குபேரா, ஜெயம் ரவியின் காதலிக்க நேரமில்லை, சமுத்திரக்கனி ஹீரோவாக நடித்திருக்கும் திரு மாணிக்கம் ஆகிய படங்கள் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

இதில், தனுஷின் குபேரா திரைப்படம் டிசம்பர் 20ம் தேதிக்கு முன்பே கூட வெளியாக வாய்ப்பிருப்பதாக ஒரு தகவல் சுற்றி வருகிறது. எப்படி ஆயினும் 4 திரைப்படங்கள் கண்டிப்பாக அந்த தேதியில் கண்டிப்பாக வெளியாகவுள்ளது. இதில், விடுதலை 2 படம் நல்ல வசூலை பெறும் என கணிக்கப்படுகிறது.

ஒருபக்கம், பிரதர் படம் படுதோல்வி ஆன நிலையில் காதலிக்க நேரமில்லை படமாவது ஜெயம் ரவிக்கு கை கொடுக்குமா என்கிற எதிர்பார்ப்பும் இருக்கிறது.

Next Story