தமிழிசை சௌந்தராஜன் பாடல் வரியில் வந்த படம் எதுனு தெரியுமா? ஆனால் உப்மா படம்னு சொல்றாங்களே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:36:26  )

இயக்குனர் செல்அம் இயக்கும் மற்றுமொரு திரைப்படம் ஆன மஞ்சள் வீரன் படத்தின் புதிய கதாநாயகனாக கூல் சுரேஷ் அறிமுகம் ஆகிறார். அவருக்கு முன் பிரபல யூடியூப்பர் டிடிஃப் வாசன் கதாநாயகனாக நடிக்க இருந்தார். ஆனால் திடீரென படத்திலிருந்து டிடிஎஃப் வாசன் நீக்கப்பட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தார்.

அதற்கு காரணம் டிடிஎஃப் வாசன் உரிய ஒத்துழைப்பை கொடுக்கவில்லை. அவருடைய கவனம் வேறு பக்கம் உள்ளது எனக் கூறியிருந்தார். இதனால் ஏற்கனவே அந்த படத்தில் ஒரு முக்கியமான கதாபாத்திரத்தில் நடிக்க இருந்த கூல் சுரேஷ் இப்போது அந்த படத்தின் கதாநாயகனாகவே மாறி இருக்கிறார்.

இது சம்பந்தமான தகவல் தான் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. இதற்கிடையில் செல்அம் ஏற்கனவே அவர் இயக்கிய முதல் திரைப்படமான திருவிக பூங்கா திரைப்படத்தை பற்றி ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார். அந்தப் படத்தில் அவர்தான் ஹீரோவாகவும் நடித்திருந்தார்.

திரு.வி.க.பூங்காவை பற்றி பல பேர் உப்மா திரைப்படம் எனக் கூறி பல வகையான விமர்சனங்களை முன் வைத்தனர். இதனால் கோபமடைந்த செல்அம் இந்த படத்தில் மறைந்த காதல் தண்டாயுதபாணி நடித்திருந்தார். தாமரை பாடல் வரிகள் எழுதி இருந்தார்.

என் எஸ் கே ரம்யா பாடியிருந்தார். முன்னாள் கவர்னர் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பாடலை எழுதியிருக்கிறார். ஜான்விஜய் இதில் நடித்திருக்கிறார் என பல முன்னணியை பிரபலங்களை குறிப்பிட்டு இப்படி ஒரு படம் உப்மா படம் என்றால் இதே படத்தில் அமெரிக்காவில் இருந்து அர்னால்டு வந்து நடித்திருந்தாலும் அந்த படம் உப்மா திரைப்படம் தான் என அவருடைய ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார் செல்அம்.

இவருடைய இயக்கத்தில் அடுத்து அனைவரும் எதிர்பார்க்கும் திரைப்படமாக மஞ்சள் வீரன் திரைப்படம் வரவிருக்கிறது. ஏற்கனவே திருவிக பூங்கா திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்தது. அதே நேரத்தில் அந்தப் படத்தின் மூலம் முதன் முதலில் அறிமுகமான செல்அம் அவருடைய இயக்குனர் முயற்சிக்காகவும் தயாரிப்பு முயற்சிக்காகவும் பல பாராட்டுகளை பெற்றிருந்தார். இதில் இதுவரை தெரியாத செய்தியாக இந்தப் படத்தில் தமிழிசை சௌந்தர்ராஜன் ஒரு பாடல் வரியை எழுதியிருப்பது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

Next Story