shankar: ஷங்கர்னா பிரம்மாண்டம்தான்.. அதுக்கு இப்படியா? ‘கேம் சேஞ்சர்’ இசை வெளியீட்டு விழாவை நடத்த இப்படி ஒரு திட்டமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:28:05  )

shankar: சங்கர் இயக்கத்தில் அடுத்து அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் திரைப்படம் கேம் சேஞ்சர். கார்த்திக் சுப்பராஜ் எழுதிய கதையை அடிப்படையாகக் கொண்டு இந்த படம் உருவாகி இருக்கிறது. தெலுங்கில் உருவாகும் இந்தப் படம் அரசியல் அதிரடி திரைப்படமாக தயாராகி இருக்கிறது.

ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜி ஸ்டூடியோஸ் தயாரிக்கும் இந்த படத்தில் ராம்சரண் ,கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ் ஜே சூர்யா, ஸ்ரீகாந்த், பிரகாஷ்ராஜ் மற்றும் சுனில் ஆகியோர் நடித்துள்ளனர். படத்திற்கு தமன் இசையமைத்திருக்கிறார். திரு ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்தியன் 2 திரைப்படத்திற்கு பிறகு ஷங்கரின் இயக்கத்தில் இந்த படம் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கிறது. ஒரே நேரத்தில் இந்தியன் 2 திரைப்படத்தையும் கேம் சேஞ்சர் படத்தையும் உருவாக்கினார் ஷங்கர். கேம் சேஞ்சர் படத்தின் ஒரு பாடல் வெளியாகி ரசிகர்களின் வரவேற்பை பெற்றுள்ளது.

இந்த நிலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா சம்பந்தப்பட்ட தகவல் ஒன்று வெளியாகி இருக்கிறது. டிசம்பர் 21ஆம் தேதி படத்தின் இசை வெளியீட்டு விழா அமெரிக்காவில் நடக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இதனுடைய ப்ரோமோஷன் லக்னோவில் நடக்கப் போவதாகவும் தகவல் வெளியாகி இருக்கிறது.

ஏனெனில் லக்னோ உள்ளிட்ட பல இடங்களை சுற்றித்தான் இந்த படத்தின் படப்பிடிப்பையும் நடத்தி இருக்கிறார்களாம். அதனால் லக்னோவில் படத்தின் ப்ரோமோசனை வைத்திருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது. இன்னொரு பக்கம் கமல் அமெரிக்காவில் இருப்பதால் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவிற்கு சிறப்பு விருந்தினராக கமலும் அழைக்கப்படலாம் என்று தெரிகிறது .

இன்னொரு பக்கம் இந்தியன் 3 படமும் வெளியாக உள்ளதால் அந்த மரியாதை நிமித்தம் காரணமாக கூட கமலை இந்த விழாவிற்கு அழைப்பதற்கு வாய்ப்பு இருப்பதாக தெரிகிறது. ஷங்கர் படம் என்றாலே பிரம்மாண்டம் என்று சொல்வார்கள். ஆனால் கேம் சேஞ்சர் படத்தைப் பொறுத்தவரைக்கும் அதன் ஒவ்வொரு விஷயமும் பிரம்மாண்டமாகத்தான் இருக்கிறது.

Next Story