கேம் சேஞ்சர் வருகையால் எஸ்கேப்பான அஜீத் படங்கள்...! ரெடியானாலும் வராதாமே..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:33:35  )

லைகா நிறுவனத்துக்குத் தொடர்ந்து இந்தியன் 2, வேட்டையன் படங்கள் எதிர்பார்த்த வசூலைக் கொடுக்கவில்லை. அதனால் அடுத்து வரும் விடாமுயற்சி படத்திற்கான ரிலீஸ் தேதியை மற்ற படங்களின் வருகையைப் பொருத்தே முடிவு செய்வார்கள் என்று தெரிகிறது. ஏன்னா ஷங்கர் இயக்கத்தில் கேம் சேஞ்சர் பிரம்மாண்டமாக உருவாகி உள்ளது. இந்தப் படம் வரும் பொங்கலுக்கு ரிலீஸ் என்கிறார்கள்.

இந்தப் படம் வருவதால் இன்னொரு பெரிய படமும் வந்தால் அது கலெக்ஷனைப் பாதிக்கும் என்று தான் அஜீத் படமான விடாமுயற்சி பின்வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள். அதே போல அஜீத் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நடித்து வரும் குட் பேட் அக்லி படமும் வராது. அது 2025 சம்மருக்குத் தான் வரும் என்கிறார்கள். இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பார்க்கலாமா...

விடாமுயற்சியும் வரல. குட்பேட் அக்லியும் வரலயாம். அவங்களே ரெடியா இருந்தா கூட கேம் சேஞ்சருக்காக வர வேண்டாம்னு முடிவு எடுத்துருக்காங்களாம். விஜய் மாநாடு நடக்கும்போது விடாமுயற்சி டீசர் வரும்னு ரசிகர்கள் கமெண்ட் போட்டுருக்காங்களாம். குட்பேட் அக்லி சம்மருக்குத் தான் வருமாம்.

கேம் சேஞ்சர் வரும்போது நம்ம படமும் வரட்டும்னு விட்டாங்கன்னா அது கலெக்ஷன்ல பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்னு இந்த முடிவை எடுத்துருக்காங்களாம். ஏற்கனவே லைகா கொஞ்சம் போராட்டத்துல தான் இருக்காங்க. அதனால இந்த நேரத்துல நாம ஏன் ரிஸ்க் எடுக்கணும்னு படத்தோட ரிலீஸைத் தள்ளிப் போடற முடிவுக்கு வந்துட்டாங்களாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

கேம் சேஞ்சருக்குக் கார்த்திக் சுப்புராஜ் கதை எழுத ஷங்கர் இயக்குகிறார். படத்தில் ராம் சரண், எஸ்.ஜே.சூர்யா, அஞ்சலி, சுனில், நாசர் உள்பட பலர் நடித்துள்ளனர். தமன் இசை அமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 2025 ஜனவரி 10ம் தேதி வெளியாகிறது. ஆனால் விடாமுயற்சி படத்துக்கான டீசர் தீபாவளி விருந்தாக வரும் என்கிறார்கள்.

Next Story