பொங்கலுக்கு சரியான போட்டிதான்! அஜித் படத்திற்கு இது சிக்கலாச்சே

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:38:09  )

அஜித்தின் நடிப்பில் அனைவரும் எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த திரைப்படம் விடாமுயற்சி. இந்தப் படத்திற்காகத்தான் காத்திருந்து காத்திருந்து ரசிகர்கள் ஏமாந்ததுதான் மிச்சம். கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களாக இந்தப் படத்தின் மீதும் அதிக அளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. அஜித்தின் எந்தப் படத்திற்கும் இல்லாத அளவுக்கு விடாமுயற்சி படத்திற்குத்தான் மாறி மாறி பிரச்சினைகளும் வந்தன.

ஆரம்பம் முதலே ஏகப்பட்ட பிரச்சினைகள். எப்படியோ ஒரு வழியாக படத்தை முடித்து ரிலீஸுக்காக காத்துக் கொண்டிருக்கிறது படக்குழு. ஆனால் ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றனர். அக்டோபர் 31 தீபாவளிக்கு படம் ரிலீஸ் என நினைக்க ரிலீஸ் தேதி தள்ளிப் போவதாக கூறப்பட்டது. அதனால் அதே தேதியில் இப்போது மூன்று படங்கள் ரிலீஸுக்காக இருக்கின்றன.

சிவகார்த்திகேயனின் அமரன், கவின் படம், ஜெயம் ரவி நடிப்பில் பிரதர் ஆகிய படங்கள் தீபாவளிக்கு தான் ரிலீஸாக போகின்றன. அதனால் விடாமுயற்சி படம் எப்போது ரிலீஸ் என் தெரியாமல் இருந்தது. ஆனால் இப்போது வந்த தகவலின் படம் படம் பொங்கல் அன்று ரிலீஸாகலாம் என்று தெரிகிறது.

ஏனெனில் பொங்கலுக்கு ரிலீஸாக இருந்த குட் பேட் அக்லி படத்தின் டிஜிட்டல் மற்றும் சாட்டிலைட் வியாபாரம் இன்னும் ஆரம்பிக்கப்படவில்லையாம். அதாவது படத்தை வாங்க யாரும் முன்வரவில்லையாம். அதனால் பொங்கலுக்கு விடாமுயற்சி படம் வரும் என்று தெரிகிறது.

எப்படியும் பொங்கல் தல பொங்கல்தான். சோலாவாக சொல்லி அடிப்பார் என எதிர்பார்த்திருந்த நிலையில் டிசம்பர் 20 ஆம் தேதி ரிலீஸாக இருந்த சங்கரின் கேம் சேஞ்சர் படம் பொங்கலுக்குத்தான் ரிலீஸாக இருக்கின்றதாம். அதனால் ஆந்திரா முழுவதும் கேம் சேஞ்சர் படத்துக்குத்தான் வரவேற்பு இருக்கும் என்று தெரிகிறது. இதனால் விடாமுயற்சி படத்தின் வசூலில் கொஞ்சம் ஏற்றம் இறக்கம் இருக்க வாய்ப்பிருக்கிறது.

Next Story