அடங்குங்கடா!.. மேனன் என்பது ஜாதி இல்லை.. நெட்டிசன்களுக்கு கவுதம் மேனன் பதிலடி!..

Published on: March 18, 2025
---Advertisement---

Gautham Menon: கோலிவுட்டில் ஸ்டைலீஷ் இயக்குனராக வலம் வருபவர் கவுதம் மேனன். மின்னலே இவரின் முதல் படமாக இருந்தாலும் காக்க காக்க திரைப்படமே இவரை ரசிகர்களிடம் பிரபலப்படுத்தியது. சூர்யா – ஜோதிகாவுக்கும் இப்படம் முக்கிய படமாக அமைந்தது. அதன்பின் வேட்டையாடு விளையாடு, விண்ணை தாண்டி வருவாயா, அச்சம் என்பது மடமையடா, துருவ நட்சத்திரம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல படங்களையும் இயக்கியுள்ளார்.

விக்ரம் நடிப்பில் உருவாகியுள்ள துருவ நட்சத்திரம் திரைப்படம் இதுவரை வெளியாகவில்லை. அதனால், கவுதம் மேனன் பல திரைப்படங்களிலும் நடித்து அதில் கிடைக்கும் சம்பளத்தில் கடன்களை அடைத்து வருகிறார். நடிப்பது எனக்கு பிடிக்கவில்லை. இப்போது எனக்கு வேறு வழியில்லை என அவரே ஒரு பேட்டியில் சொல்லியிருந்தார்.

வெற்றிமாறன் இயக்கிய விடுதலை மற்றும் விடுதலை 2 ஆகிய படங்களிலும் முக்கிய வேடத்தில் நடித்திருந்தார். பெரும்பாலும் உயர் போலீஸ் அதிகாரியாகவே எல்லா படங்களிலும் நடித்து வருகிறார். தற்போது துருவ நட்சத்திரம் படத்தை எப்படியாவது வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்.

அதோடு,ஊடகங்களில் பேசி வரும் அவர் வெளிப்படையாக பல விஷயங்களை பேசி வருகிறார். அதில் ஒன்றுதான் ‘சாதி பிரச்சனைகளை வைத்து படமெடுப்பதில் எனக்கு உடன்பாடு இல்லை. இப்போது சாதி பிரச்சனை என்பது அதிக அளவில் இல்லை. எனவே, பல வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை படமாக எடுத்து வருகிறார்கள். அதை இப்போது காட்ட தேவையில்லை என்பது என் எண்ணம்’ என பேசியிருந்தார்.

இதற்கு பலரும் ஆதரவு தெரிவித்தாலும் ஒரு குரூப் அவரை அட்டாக் செய்தது. சாதியை விரும்பாத நீங்கள் பெயரில் ஏன் மேனனை வைத்திருக்கிறீர்கள் என புத்திசாலித்தனமாக கேள்வி கேட்டனர். கவுதம் மேனன் கேரளாவை சேர்ந்தவர். மேனன் என்பது சாதி இல்லை. அது குடும்பப் பெயர். இது புரியாமல் அவரை பலரும் திட்டி வந்தனர். இதற்கு பதில் சொன்ன கவுதம் மேனன் ‘மேனன் என்பது சாதியில்லை. அது என் குடும்ப பெயராகவே பார்க்கிறேன்’ என விளக்கமளித்துள்ளார்.

சிவா

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment