Connect with us

Cinema News

12 வருஷத்து கதைய மறுபடியும் தூசி தட்டுறாங்க போலயே.. விஜய் இடத்தில் விஷாலா?..

Actor Vishal: தமிழ் சினிமாவில் இந்த வருடத்திற்கு முதல் ஹிட் திரைப்படத்தை கொடுத்து வெற்றி நாயகனாக மாறி இருக்கின்றார் நடிகர் விஷால். கடந்த 12 வருடங்களுக்கு முன்பு இயக்குனர் சுந்தர் சி இயக்கத்தில் விஷால், சந்தானம், அஞ்சலி, வரலட்சுமி, மனோபாலா, மணிவண்ணன் ஆகியோர் நடிப்பில் உருவாகி இருந்த திரைப்படம் மதகஜராஜா.

இந்த திரைப்படம் அப்போது நிதி பிரச்சனை காரணமாக வெளியிடாமல் கிடப்பில் போடப்பட்டது. அதனை தொடர்ந்து பலமுறை இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்வதற்கு முயற்சி செய்தும் முடியாமல் போனது. இதனை தொடர்ந்து இந்த பொங்கல் பண்டிகைக்கு இப்படத்தை படக்குழுவினர் வெளியிட்டு இருந்தார்கள்.

இப்படம் இந்த ஆண்டு பொங்கல் வின்னராக மாறி இருக்கின்றது. இந்த திரைப்படத்திற்கு இவ்வளவு பெரிய வரவேற்பு கிடைக்கும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. இப்படங்களுடன் வெளியான கேம் சேஞ்சர், வணங்கான், காதலிக்க நேரமில்லை, நேசிப்பாயா போன்ற திரைப்படங்கள் கலையான விமர்சனங்களை சந்தித்த நிலையில் மதகஜராஜா திரைப்படம் மட்டும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கின்றது.

மேலும் நேற்று சென்னையில் நடைபெற்ற விஜய் ஆண்டனி இசை நிகழ்ச்சியில் கூட நடிகர் விஷால் ‘மை டியர் லவ்வரு’ பாடலை பாடி ரசிகர்களை மேலும் உற்சாகப்படுத்தி இருந்தார். சமீபத்தில் இந்த திரைப்படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்ட படத்தின் நடிகர்கள் பலரும் மிக மகிழ்ச்சியாக பேசி இருந்தார்கள்.

அதில் பேசிய நடிகர் விஷால் தனது அடுத்தடுத்த படங்களின் அப்டேட் குறித்து கூறியிருந்தார். அப்போது அடுத்ததாக கௌதம் மேனன் இயக்க உள்ள திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக கூறி இருந்தார். அதனை தொடர்ந்து துப்பறிவாளன் மற்றும் அஜய் ஞானமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் நடிக்க இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் நடிகர் விஷால் நடிப்பது குறித்து சினிமா வட்டாரங்களில் பரவலாக பேசப்பட்டு வந்தது. தற்போது அது குறித்து ஒரு சுவாரசிய தகவல் வெளியாகியிருக்கின்றது. அது என்னவென்றால் கௌதம் வாசுதேவ் மேனன் நடிகர் விஜயை வைத்து இயக்க இருந்த யோகான் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தை தற்போது தூசி தட்டி எடுத்து விஷாலை வைத்து இயக்குவதற்கு கௌதம் வாசுதேவ் மேனன் முடிவு செய்து இருக்கின்றாராம்.

ஏற்கனவே 12 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட மதகஜராஜா திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்த நிலையில் தற்போது 12 வருடங்களுக்கு முன்பு விஜயை வைத்து எடுக்க இருந்த திரைப்படத்தில் விஷால் நடிக்க உள்ள விஷயம் கோலிவுட் வட்டாரங்களில் வைரலாக பேசப்படுகின்றது. மேலும் கௌதம் மேனன் மற்றும் விஷால் காம்போ என்பது யாரும் எதிர்பார்க்காத ஒன்று. இதனால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகரித்து இருக்கின்றது.

google news
Continue Reading

More in Cinema News

To Top