அது என் படம் இல்ல.. தனுஷ் படத்தை கவுத்துவிட்ட கௌதம் மேனன்.. என்ன பிரச்னையோ?..

Director Gautham Menon: தமிழ் சினிமாவில் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக வலம் வருபவர் கௌதம் வாசுதேவ் மேனன். ஸ்டைலிஷ் இயக்குனர் என்ற பெயரைப் பெற்ற இவர் தமிழில் பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். மின்னலே, காக்க காக்க, வேட்டையாடு விளையாடு, விண்ணைத்தாண்டி வருவாயா, வாரணம் ஆயிரம், வெந்து தணிந்தது காடு உள்ளிட்ட பல திரைப்படங்கள் சூப்பர் டூப்பர் ஹிட் கொடுத்து இருக்கின்றது.
தற்போது தமிழ் சினிமாவில் இயக்குனராக மட்டுமில்லாமல் பல திரைப்படங்களில் நடிகராகவும் நடித்து வருகின்றார். தனக்கு முக்கியத்துவம் கொடுக்கும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் கௌதம் வாசுதேவ் மேனன் வெந்து தணிந்தது காடு திரைப்படத்திற்கு பிறகு தமிழில் எந்த திரைப்படத்தையும் இயக்கவில்லை.
தற்போது மலையாளத்தில் நடிகர் மம்முட்டியை வைத்து டாம்னிக் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படத்தின் மூலமாக மலையாள சினிமாவில் இயக்குனராக அறிமுகமாக இருக்கின்றார். இந்த திரைப்படத்தை தொடர்ந்து தமிழில் அடுத்ததாக நடிகர் விஷாலை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கப்போவதாக பேச்சு அடிபட்டு வருகின்றது.
அதிலும் இந்த திரைப்படம் விஜயை வைத்து 12 ஆண்டுகளுக்கு முன்பு கௌதம் மேனன் இயக்க இருந்த யோகான் அத்தியாயம் ஒன்று என்ற திரைப்படத்தின் கதையை விஷாலை வைத்து இயக்கப் போவதாக ஒரு தகவல் அடிபட்டு வருகின்றது. இந்நிலையில் டாம்னிக் திரைப்படத்தின் புரமோஷனுக்காக தொடர்ந்து பல youtube சேனல்களுக்கு பேட்டி கொடுத்து வருகின்றார் கௌதம் வாசுதேவ் மேனன்.
இவர் கொடுத்து வரும் பேட்டிகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது. நேற்று நடிகர் சூர்யா துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் நடிக்காதது தொடர்பான ஆதங்கத்தை கொட்டி தீர்த்து இருந்தார். அந்த வகையில் இன்று என்னை நோக்கி பாயும் தோட்டா திரைப்படம் குறித்து பேசி இருக்கின்றார்.
கடந்த 2019 ஆம் ஆண்டு தனுசை வைத்து என்னை நோக்கி பாயும் தோட்டா என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார் கௌதம். இந்த திரைப்படம் பல சிக்கல்களை தாண்டி வெளியாகி படுதோல்வியை சந்தித்தது. இந்த திரைப்படத்தை இயக்கிக் கொண்டிருந்தபோதே கௌதம் மேனனுக்கும் நடிகர் தனுஷ்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் இதனால் படத்தில் அவர் சரியாக நடிக்கவில்லை என்று பல குற்றச்சாட்டுகள் எழுந்து வந்தது.
இந்நிலையில் இந்த திரைப்படம் குறித்து தொகுப்பாளர் கேள்வி எழுப்பிய போது அது என் திரைப்படம் கிடையாது, வேறு யாரோ இயக்கிய திரைப்படம் என்று கூறி அந்த கேள்வியில் இருந்து நகர்ந்து விட்டார். தான் இயக்கிய திரைப்படத்தை இப்படி கூறுவார் என்று யாருமே எதிர்பார்க்கவில்லை. இந்த வீடியோவானது தற்போது சமூக வலைதள பக்கங்களில் வைரலாகி வருகின்றது.