ரஜினி வெறியனு சொன்னாரு! மறைமுகமா ‘வேட்டையன்’ படத்தை தாக்கிய ஞானவேல்ராஜா

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:35  )

வேட்டையன் திரைப்படம் வெளியாகி நல்ல ஒரு வரவேற்பை பெற்று வருகிறது. படம் ரிலீஸில் ஏகப்பட்ட குழப்பங்கள் இருந்தன. வேட்டையன் திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை அறிவிப்பதற்கு முன்பே கங்குவா திரைப்படம் அதன் ரிலீஸ் தேதியை அறிவித்திருந்தது. அக்டோபர் 10 ஆம் தேதி என ரிலீஸூக்கு தயாராக இருந்தது கங்குவா திரைப்படம்.

ஆனால் வேட்டையன் திரைப்படமும் அதே ரிலீஸ் தேதியை லாக் செய்தது. இதனால் கோடம்பாக்கத்தில் ஒரே பரபரப்பாக இருந்தது. இரண்டு படங்களுமே பெரிய நடிகர்களின் படங்கள். அதுவும் பல மொழிகளில் பல கோடி பட்ஜெட்டில் தயாராகியிருக்கும் கங்குவா திரைப்படத்தை சோலோவாக ரிலீஸ் செய்ய திட்டமிட்டிருந்தார்கள். அதனால் என்ன செய்வதென்று தெரியாமல் கங்குவா திரைப்படம் விழிபிதுங்கி நின்றது.

அதன் பிறகு பல ஆலோசனைகளுக்கு பிறகு கங்குவா திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை நவம்பர் 14 என தள்ளி வைத்தார்கள். மேலும் படத்தின் தயாரிப்பாளாரான ஞானவேல் ராஜாவும் நான் ரஜினியின் தீவிர ரசிகன். எப்படி வேட்டையன் திரைப்படத்தோடு கங்குவா திரைப்படத்தை மோத விடுவேன் என்றெல்லாம் கூறியிருந்தார்.

அதுமட்டுமில்லாமல் சூர்யாவும் கங்குவா திரைப்படம் ஒரு குழந்தை மாதிரி. அதனால் வேட்டையன் திரைப்படம் தான் முதலில் வரவேண்டும்.அதுதான் ரஜினிக்கு நாங்கள் கொடுக்கிற மரியாதை என்றும் கூறியிருந்தார். இந்த நிலையில் நேற்று சோசியல் மீடியாவில் ஒரு நேர்காணல் நடந்தது.

அதில் ஞானவேல் ராஜா மற்றும் பிற பத்திரிக்கை நண்பர்கள் கலந்து கொண்டு சில விஷயங்களை பற்றி விவாதித்தனர். அதில் ஒருவர் நம்ம படத்துக்கு இன்னும் cast and crew பற்றிய ஒழுங்கான அறிவிப்பு வரலேயண்ணா என்று கேட்டிருந்தார்.

அதற்கு ஞானவேல் ராஜா சமீபத்தில் பெரிய நட்சத்திரத்துடன் ஒவ்வொரு கேரக்டருக்கும் தனியா அப்டேட் விட்டு இப்போ படம் ரிலீஸ் பண்ணாங்க.அது ஓப்பனிங்குக்கு எதாவது உதவி பண்ணதா என்று கேட்டிருந்தார். உடனே இவர் கூறிய கருத்து சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. அதாவது ரஜினியின் வேட்டையன் படத்தைத்தான் ஞானவேல் ராஜா மறைமுகமாக விமர்சித்திருக்கிறார் என்று கூறி வருகிறார்கள்

Next Story