இதெல்லாம் உருட்டா? வேட்டையன், கங்குவா ரிலீஸ் பற்றி ஞானவேல்ராஜாவே சொல்றாரு பாருங்க
ஜூலை மாதம் தொடங்கியாச்சு. அடுத்தடுத்து பெரிய நடிகர்களின் படங்கள் ரிலீஸ் ஆக காத்துக் கொண்டிருக்கின்றது. வரும் 12ஆம் தேதி இந்தியன் 2 படம் உலகெங்கிலும் ரிலீஸ் ஆக இருக்கின்றது. இந்த நிலையில் வேட்டையன் திரைப்படமும் கங்குவா திரைப்படமும் ஒரே நேரத்தில் அக்டோபர் 10ஆம் தேதி ரிலீஸ் என அறிவிப்பு வெளியானதும் ஒட்டுமொத்த ரசிகர்கள் மத்தியில் பீதியை கிளப்பியது.
ரஜினியுடன் எப்படி சூர்யாவின் படத்தை நேரடியாக மோத விடுகிறார்கள் என பல பேர் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பில் தாமதமாவதால் தீபாவளி அன்று ரிலீஸ் ஆக வேண்டிய விடாமுயற்சி கொஞ்சம் தள்ளிப் போக வாய்ப்பு இருப்பதாக சொல்லப்பட்டது.
அதனால் வேட்டையன் திரைப்படத்தை தீபாவளி அன்று ரிலீஸ் செய்ய இருப்பதாகவும் கங்குவா திரைப்படம் அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் ஆகப்போவதாகவும் சோசியல் மீடியாவில் செய்திகள் வெளியானது. இதைப்பற்றி பிரபல சினிமா தயாரிப்பாளர் தனஞ்ஜெயனும் இதே மாதிரியான ஒரு கருத்தை தான் முன்வைத்தார்.
ஆனால் அதற்கு முன்பே அவர் இரு படங்களும் ஒன்றாக தான் ரிலீஸ் ஆக இருக்கின்றன. திரையரங்குகள் சமமாக பிரிக்கப்படும். வசூல் சமமாக பிரிக்கப்படும் என்ற வகையில் அவர் பேசியிருந்தார். இந்த நிலையில் ஞானவேல் ராஜா ஒரு பிரபல தனியார் youtube சேனலுக்கு பேட்டி அளித்த ஒரு வீடியோ இப்போது வைரலாகி வருகின்றது.
அதில் ஞானவேல் ராஜாவிடம் வேட்டையனோடு கங்குவா திரைப்படத்தை எப்படி ரிலீஸ் செய்ய நினைத்தீர்கள் என்ற ஒரு கேள்வி முன் வைக்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த ஞானவேல் ராஜா இதைப்பற்றி நானே ரசிகர்களுக்கு சொல்ல வேண்டும் என நினைத்தேன். வேட்டையன் படத்தின் டார்கெட் தீபாவளி.
அதனால் தீபாவளியை டார்கெட் செய்து அவர்கள் மும்முரமாக இறங்கி இருக்கிறார்கள். அக்டோபர் 10 ஆம் தேதியில் எந்த ஒரு படமும் இதுவரை பிளான் செய்யவில்லை. அதற்கு மேலாக என்னுடைய பிறந்த நாளை விட ரஜினியின் பிறந்தநாளுக்கு தான் நான் கோயிலுக்கு சென்று 108 முறை கோயிலை சுற்றி வருவேன்.
அந்த அளவுக்கு ரஜினியின் தீவிர ரசிகன் நான். அப்படி இருக்கும்போது எப்படி சார் ரஜினி படத்தோடு என் படத்தை மோத விடுவேன். ஆனால் சோசியல் மீடியாவில் இப்படியான செய்தி வருகிறது என்றால் அவர்கள் இதை வைத்து காசு பார்க்க இந்த மாதிரி செய்திகளை வெளியிட்டு வருகிறார்கள் என ஞானவேல் ராஜா கூறியிருந்தார்.
இதை பார்த்த ரசிகர்கள் அப்போ தனஞ்ஜெயன் சொல்றது எல்லாம் ஒரு உருட்? என்ற ஒரு கேள்வியை கேட்டு வருகின்றனர். அதுமட்டுமல்லாமல் வேட்டையன் இன்னும் இண்டஸ்ட்ரி டாக்காக அக்டோபர் பத்தாம் தேதி ரிலீஸ் என்று சொல்லப்படுகிறதாம். விடா முயற்சி அக்டோபர் 31 என்று தான் இதுவரை உறுதியாக இருக்கிறார்கள்.
இருந்தாலும் இந்த இரண்டு படங்களின் முழுமையான பணிகள் முடிவடைந்த பிறகு தான் என்ன விவரம் என தெரியவரும். இதற்கிடையில் லைக்கா நிறுவனத்தின் ஃபர்ஸ்ட் கான்சன்ட்ரேட் இந்தியன் 2 படம் தான். இந்தியன் 2 ரிலீஸ் ஆன பிறகு வேட்டையன் மற்றும் விடாமுயற்சி ஆகிய படங்களின் ரிலீஸ் செய்தியை அடுத்தடுத்து லைக்கா நிறுவனம் வெளியிடும். அதுவரை வேட்டையன் திரைப்படம் அக்டோபர் 10 என்ற நிலைமையிலேயே இருக்கிறது என்ற ஒரு செய்தி தான் இப்போது வைரலாகி வருகின்றது.