கோட் வசூல் இத்தனை கோடியா? இருந்தாலும் அந்தப் படத்தை ஓவர் டேக் செய்ய முடியலயே
எச் வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69 வது திரைப்படத்தின் பூஜை சில தினங்களுக்கு முன்பு தான் நடந்தது. அந்த பூஜையில் விஜய், படத்தின் ஹீரோயின் பூஜா ஹெக்டே, செகண்ட் ஹீரோயின் மமீதா பைஜூ, இயக்குனர் என அனைவரும் கலந்து கொண்டனர் .
முதன்முறையாக எச் வினோத்தும் விஜய்யும் இணையும் திரைப்படமாக அவருடைய 69 வது திரைப்படம் அமைவதால் ரசிகர்கள் அனைவரும் படத்தின் மீது மிகுந்த அளவு எதிர்பார்ப்பை வைத்திருக்கின்றனர். விஜயின் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் தி கோட்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல ஒரு ரெஸ்பான்ஸ் பெற்றது. உலகம் முழுவதும் படத்தின் மொத்த வசூல் 455 கோடி என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருந்தது .தமிழ்நாட்டில் மட்டும் அதிக அளவு வசூலித்திருப்பதாக சொல்லப்படுகிறது.
தமிழ்நாட்டில் மொத்த வசூலாக 217 கோடியாக இந்த படம் வசூலித்து இருக்கிறது. இதற்கு முன் விஜய் நடித்த லியோ திரைப்படம் தமிழ்நாட்டில் மொத்த வசூலாக 232 கோடியாக இருந்ததாம். அந்தப் படத்தை கம்பேர் பண்ணும் போது திரைப்படம் தமிழ்நாட்டில் 15 கோடி குறைவாக கோட் வசூலித்து இருக்கிறது.
இந்த வெற்றியை கொண்டாடும் விதமாகத்தான் திரைப்பட விநியோகஸ்தர் ராகுல் விஜயை அழைத்து ஒரு சின்ன பார்ட்டி ஒன்றை ஏற்பாடு செய்திருந்தார். அதில் படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா ராகுல் விஜய் ஆகிய மூவரும் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாடி மகிழ்ந்தனர்.