வேணாம்.. போதும்..வலிக்குது! வெளியான ‘கோட்’ படத்தின் மூணாவது சிங்கிள்! ரசிகர்கள் கதறல்

by ராம் சுதன் |

கோட் படத்தின் மூன்றாவது சிங்கிள் வெளியாகி ரசிகர்களை பரபரப்பில் வைத்திருக்கிறது. விஜய் நடிக்கும் திரைப்படம் கோட். இந்தப் படத்தை வெங்கட் பிரபு இயக்க படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா. படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி மற்றும் சினேகா நடித்திருக்கிறார்கள். மேலும் பிரபுதேவா, பிரசாந்த், லைலா, அஜ்மல் போன்ற பல நடிகர்களும் நடித்திருக்கிறார்கள்.

படத்தில் விஜய் இரட்டை வேடங்களில் நடித்திருக்கிறார். ஏற்கனவே அழகிய தமிழ் மகன், பிகில் போன்ற படங்களில் இரட்டை வேடங்களில் கலக்கிய விஜய் இந்தப் படத்திலும் இரு வேடங்களில் நடித்திருக்கிறார். அதில் அப்பா கேரக்டரில் எப்போதும் உள்ள கெட்டப்பில் நடித்திருக்கிறார்.

மகன் கெட்டப்பிற்கு டி-ஏஜிங் என்ற தொழில் நுட்பத்தை பயன்படுத்தி வடிவமைத்திருக்கிறார்கள். படத்தில் போஸ்டர் மற்றும் முதல் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்களின் கதறலுக்கு ஆளாகியிருக்கிறது கோட் படம்.

ஏனெனில் படத்தின் இசை ரசிகர்களை திருப்திப்படுத்தவில்லை என்றுதான் சொல்லவேண்டும். முதல் சிங்கிள் வெளியான போதே யோவ் யுவன் அண்ணா என்னய்யா பாட்டு போட்டு வச்சிருக்க என்றுதான் ரசிகர்கள் கதறினார்கள். அதன் பிறகு வெளியான சினேகா விஜய் காம்போவில் உருவான இரண்டாவது சிங்கிள் கொஞ்சம் செண்டிமெண்டாக ரசிகர்களை ரீச் செய்தது.

ஆனால் இன்று வெளியான மூன்றாவது சிங்கிள் ஒட்டுமொத்தமாக சோலியை முடிச்சுப்போட்டான்டா என்ற ரேஞ்சிற்கு அமைந்திருக்கிறது. அப்படித்தான் ரசிகர்களும் கூறி வருகிறார்கள். அதிலும் டீ-ஏஜிங் முறையில் விஜயை பயன்படுத்தி இந்த பாடலில் ஆட வைத்திருக்கிறார்கள்.

அது விஜய் மாதிரியே இல்லை என்றுதான் சொல்ல வேண்டும். அதை பார்த்தும் ரசிகர்கள் என்னங்கய்யா பண்ணி வச்சிருக்கீங்க எங்க தளபதிய? இதுக்கு ஒரிஜினல் விஜயை க்ளீன் ஷேவ் செய்து ஆட வைத்திருக்கலாமே என்று கூறி வருகிறார்கள். இன்னும் சிலர் பல மீம்ஸ்களை போட்டு கிழித்து வருகிறார்கள்.

Next Story