‘கோட்’ பட டைட்டிலுக்கு வந்த சிக்கல்! இதென்னப்பா கடைசி நேரத்துல இப்படி ஒரு பஞ்சாயத்து?

by ராம் சுதன் |

விஜய் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படம் கோட். வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடிக்கும் இந்தப் படத்தில் விஜய்க்கு ஜோடியாக மீனாட்சி சௌத்ரி நடிக்கிறார். இவர்களுடன் இணைந்து சினேகா, லைலா, பிரசாந்த், பிரபுதேவா, அஜ்மல் போன்ற பல முக்கிய பிரபலங்களும் நடிக்கின்றனர். படத்திற்கு இசை யுவன் சங்கர் ராஜா.

படத்தின் முதல் இரண்டு சிங்கிள்கள் வெளியாகி ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று மூன்றாவது சிங்கிளும் வெளியாகியிருக்கிறது. ஆனால் இந்த பாடலும் ரசிகர்களிடம் பெரிய ஹைப்பை ஏற்படுத்தும் என காத்துக் கொண்டிருந்த ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைத்தான் கொடுத்திருக்கிறது.

விஜய்க்குண்டான அந்த பீட் மொத்தத்தில் கோட் படத்தில் இல்லை என்று தான் சொல்ல வேண்டும். அதுமட்டுமில்லாமல் படத்தில் அப்பா - மகன் என இரு வேடங்களில் விஜய் நடித்திருக்கிறார். இதில் மகன் கேரக்டருக்காகத்தான் தனது கெட்டப்புக்காக வி.எஃப்.எக்ஸ்க் வேலைகளுக்காக அமெரிக்கா சென்றிருந்தார்,.

அப்படி என்ன கெட்டப் என எதிர்பார்த்த ரசிகர்களுக்கு மூன்றாவது சிங்கிளில் அதன் ரிசல்ட் நன்றாகவே தெரிகிறது. மூன்றாவது சிங்கிளில் விஜயின் தோற்றம் மிகவும் யங்கான விஜயாக காட்டியிருக்கிறார்கள். ஆனால் அது உண்மையிலேயே விஜய் மாதிரியே இல்லை. இதை பார்த்த ரசிகர்கள் அனைவரும் எங்க தளபதியை என்ன செய்து வைத்திருக்கிறீர்கள் என கொதித்து வருகிறார்கள்.

இந்த நிலையில் கோட் படத்தின் டைட்டில் பிரச்சினை ஒன்று கிளம்பியிருக்கிறது. இதுவரை வெளியான எல்லா போஸ்டர்களிலும் கோட் என்றே குறிப்பிடவில்லை. அதன் முழு அர்த்தமான ‘greatest of all time’ என்றே குறிப்பிட்டு வருகிறார்கள்.

அதற்கு பின்னணியில் ஒரு காரணம் இருக்கிறது. ஏற்கனவே கோட் என்ற பெயரில் யாரோ ஒருவர் தலைப்பை பதிவை செய்து வைத்திருக்கிறாராம். அவர் இந்த தலைப்பை கொடுக்க மாட்டேன் என்று சொன்னாரா? இல்லை இவர்கள் கொடுத்த தொகை போதவில்லையா? என்று தெரியவில்லை.

கோட் என்பதை இவர்கள் பயன்படுத்த தயங்குகிறார்களாம். அதனாலேயே முழு பெயரை வெளிப்படுத்தி வருகிறார்கள். ரசிகர்கள்தான் கோட் என்று சொல்லி வருவதாக கூறப்படுகிறது.

Next Story