ஆடுனது ஒரு குத்தமாடா? NEEK பாடலால் பிரியங்கா மோகனை வச்சு செய்யும் நெட்டிசன்கள்
தனுஷ் இயக்கத்தில் சமீபத்தில் ரிலீசான திரைப்படம் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம். இந்த படத்தில் பவிஷ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர், ரம்யா ரங்கநாதன் என பல நடிகர்கள் நடித்திருந்தனர். முற்றிலும் இளைஞர்களை வைத்து இந்த படத்தை இயக்கியிருந்தார் தனுஷ். இளைஞர்களுக்கு இடையேயான காதல், திருமணம், அவர்களுக்கு இடையில் இருக்கும் உறவுமுறை போன்றவைகளை மையப்படுத்தி இந்த படம் வெளியானது.
இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார். படம் அண்மையில் வெளியாகி ரசிகர்களின் கலவையான விமர்சனத்தை பெற்று வந்தது. படம் ரிலீஸ் ஆவதற்கு முன்பாகவே இந்த படத்தில் அமைந்த கோல்டன் ஸ்பேரோ பாடல் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. இந்த பாடலில் பிரியங்கா மோகன் நடனமாடி இருப்பார். அதுவும் ஐயர் வீட்டு மாமி போன்ற உடை அணிந்து வித்தியாசமான ஒரு காஸ்ட்யூமில் கலக்கல் நடனம் ஆடியிருப்பார் பிரியங்கா மோகன்.
இந்த நிலையில் பாடலின் முழு வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி இருக்கிறது. கூடவே இந்த பாடலுக்கான மீம்ஸும் சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகின்றது. இந்த வீடியோவை பதிவிட்டு பின்னணியில் பட்டர்ஃபிளை பட்டர்ஃபிளை பாடலை போட்டு ரசிகர்கள் பிரியங்கா மோகனின் நடனத்தை கிண்டல் செய்து வருகின்றனர். பிரியங்கா மோகனை பொறுத்தவரைக்கும் இதுவரை நடித்த படங்களில் பெரிதாக நடனம் ஆடியிருக்க மாட்டார்.
அவர் ஆடி மிகப்பெரிய ஹிட்டான பாடல் என்றால் அது இந்த கோல்டன் ஸ்பேரோ பாடல்தான். ஆனால் நெட்டிசன்களுக்கு கிடைச்ச வரைக்கும் போதுமே. இந்த பாடலையும் பிரியங்கா மோகனின் நடனத்தையும் பட்டர்ஃப்ளை பாடலுக்கு சரியாக மேட்ச் செய்து கிண்டலடித்து இருக்கின்றனர். இந்த மீம்ஸ்தான் இப்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது.