இப்பவே 100 கோடி நஷ்டமா?!.. குட் பேட் அக்லி-க்கு வந்த நிலைமை!.. பாவம் தயாரிப்பாளர்!...
Good bad ugly: விடாமுயற்சி படத்தில் நடித்து கொண்டிருந்த அஜித் அந்த படத்தின் படப்பிடிப்பு பாதி முடிந்து பின்னர் டேக் ஆப் ஆகாமல் அப்படியே நின்றதால் குட் பேட் அக்லி படத்தில் நடிக்க சம்மதித்தார். இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி வருகிறார். இவர், திரிஷா இல்லனா நயன்தாரா மற்றும் மார்க் ஆண்டனி போன்ற வெற்றிப்படங்களை கொடுத்தவர்.
அதோடு, நேர்கொண்ட பார்வை படத்தில் அஜித் நடித்தபோது அந்த படத்தில் ஆதிக்கும் நடித்திருந்தார். விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு தடங்கல் ஆனதற்கு காரணம் அப்படத்தை தயாரித்த லைக்கா நிறுவனம் நிதி நெருக்கடியில் சிக்கியதுதான் என சொல்லப்பட்டது. ஏனெனில், ஒரே நேரத்தில் விடாமுயற்சி, இந்தியன் 2, வேட்டையன் என 3 பெரிய படங்களை அந்நிறுவனம் தயாரித்து வந்தது.
தற்போது விடாமுயற்சி படம் முடிவுக்கு வந்துவிட்டது. ஒரே ஒரு பாடல் காட்சி மட்டும் ஸ்பெயின் நாட்டில் எடுக்க திட்டமிட்டிருக்கிறார்கள். அதேபோல், குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பும் ஸ்பெயின் நாட்டில் நடைபெற்று வருகிறது. அஜித் இப்போது ஐரோப்பா கார் பந்தயத்தில் கலந்துகொள்ளவிருப்பதால் ஸ்பெயின் நாட்டில் படப்பிடிப்பை நடத்த சொல்லிவிட்டாராம்.
இன்று காலை ஷாலினி அஜித்துடன் நடந்து கொண்டே எடுத்த செல்பி வீடியோவும் ஸ்பெயின் நாட்டில் எடுக்கப்பட்டதுதான். படப்பிடிப்பு நேரம் போக மற்ற நேரங்களில் கார் பந்தயத்திற்கு பயிற்சி எடுத்து வருகிறாராம் அஜித். ஒருபக்கம் குட் பேட் அக்லி படத்தின் வியாபாரம் தொடர்பான செய்தி வெளியே கசிந்திருக்கிறது.
இந்த படத்தில் நடிக்க அஜித்தின் சம்பளம் 165 கோடி என சொல்லப்படுகிறது. இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு 10 கோடி, அதோடு 110 நாட்கள் படப்பிடிப்பை நடத்த திட்டமிட்டிருக்கிறார்களாம். எனவே, படத்தின் பட்ஜெட் எப்படியும் 360 ஆகிவிடும் என்கிறார்கள். ஆனால், படத்தின் வியாபாரத்தை கணக்கிட்டு பார்த்தால் 260 கோடியை கூட தொடவில்லையாம். 240லிருந்து 250 கோடி வரை மட்டுமே வியாபாரம் ஆகும் என சொல்கிறார்கள்.
அப்படி பார்க்கும்போது தயாரிப்பாளருக்கு 100 கோடி நஷ்டம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள். இந்த படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் என்கிற நிறுவனம்தான் தயாரித்து வருகிறது. சுமார் 1500 கோடியை கோலிவுட்டில் களமிறக்க திட்டமிட்டிருக்கிறந்து இந்த நிறுவனம். எனவே, குட் பேட் அக்லி மட்டுமில்லாமல் தொடர்ந்து பல நடிகர்களையும் வைத்து படங்களை இயக்க இந்நிறுவனம் திட்டமிட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.