14 வருடங்களுக்கு பின்னர் அஜித்துடன் இணையும் பிரபலம்… வெவரம்தான் ஆதிக் நீங்க..
Ajith: தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் நடிகர் அஜித் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் குட் பேட் அக்லி. இப்படத்தில் தற்போது இணைந்திருக்கும் பிரபலம் குறித்த ஆச்சரிய அப்டேட் இணையத்தில் வெளியாகி இருக்கிறது.
துணிவு படத்தின் வெற்றிக்கு பின்னர் நடிகர் அஜித்குமாரின் விடாமுயற்சி திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் அப்படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு பல மாதங்கள் ஆனது. தொடங்கிய படப்பிடிப்பும் கால சூழ்நிலை காரணமாக நிறைய முறை தள்ளிப்போனது. இதைத் தொடர்ந்து பல கட்ட போராட்டங்களுக்கு பின்னர் விடாமுயற்சி சூட்டிங் முடிந்திருக்கிறது.
தற்போது அஜித் குமார் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் டைட்டில் அறிவிப்பு ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெற்றது. தொடர்ச்சியாக தற்போது படப்பிடிப்பும் பரபரப்பாக நடந்து வருகிறது.
மைத்திரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வருகிறார். பல வருடங்களுக்கு பின்னர் நடிகர் அஜித்குமார் இப்படத்தில் காமெடி கலந்த ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. தொடர்ச்சியாக அஜித்துடன் விடாமுயற்சிக்கு பின்னர் இப்படத்திலும் திரிஷா கூட்டணி அமைத்திருக்கிறார்.
இப்படத்தில் முக்கிய இடத்தில் நடிகர் பிரசன்னா நடிக்க இருப்பதாக தன்னுடைய எக்ஸ் வலைதளம் மூலம் அவர் சமீபத்தில் பதிவிட்டிருந்தார். மேலும் பல முக்கிய பிரபலங்கள் இப்படத்தில் நடித்து வருகின்றனர். இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் படம் நிறுவனத்தால் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இப்படத்தில் நடிகர் அஜித்துடன் பிரபல நடிகர் பிரபு இணைந்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே அசல் மற்றும் விழா படங்களில் இருவரும் இணைந்து நடித்திருந்தனர். தற்போது 14 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் அஜித்துடன் இணைந்து இருக்கிறார் நடிகர் பிரபு.
அது மட்டுமல்லாமல் நடிகர் பிரபுவின் மகளை தான் இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் சமீபத்தில் திருமணம் செய்து கொண்டார். இதனால் தன்னுடைய முக்கிய படம் ஒன்றில் மாமனாரை இணைத்து இருப்பது ரசிகர்களை ஆச்சரியப்பட வைத்துள்ளது.