நடிகரின் சட்டையைப் பிடிச்ச கவுண்டமணி... ஒத்த ஓட்டு முத்தையாவில் நடந்த கலக்கல் சம்பவம்

கவுண்டமணி ஹீரோவாக நடித்த ஒத்த ஓட்டு முத்தையா இன்று வெளியாகிறது. இதையொட்டி படத்தின் இயக்குனர் சாய் ராஜகோபாலும், நடிகர் ஓஏகே சுந்தரும் இணைந்து யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ளனர். என்ன சொல்றாங்கன்னு பாருங்க.
எதிர்க்கட்சி: அப்பா ஓஏகே தேவர். அவர் தேவர் நாடக மன்றம் வச்சிருந்தாரு. அதுலயே கவுண்டமணி நடிச்சிட்டாரு. அவரு கூட இந்தப் படத்துல நான் நடிப்பேன்னு நினைச்சிக்கூடப் பார்க்கல. அது ஒரு பெரிய விஷயம். இந்தப் படத்துல சாருக்கு வில்லனா வரல. ஒரு எதிர்க்கட்சியாகத் தான் வந்துருக்கேன். அதனால அதை வில்லன்னு சொல்ல முடியாது. எல்லாமே ஒரு கேரக்டர்தான்.
நான் சீரியஸா பேசணும். அது காமெடியா ஒர்க் அவுட் ஆகணும். அப்படித்தான் இந்தப் படம் வந்துருக்கு. முதல் நாள் பெரிய லெஜண்ட் கூட நடிக்கப் போறோம்னு பயம் இருந்தது. ஆனா எடுத்த எல்லா ஷாட்டும் ஓகே. 2 வண்டி நிக்கும். நாங்க ரெண்டு பேரும் இறங்கி நடந்து வர்ற சீன். ஆனா அவரு கொஞ்சம் கூட பயமே இல்ல. அந்த லுக் எல்லாமே செமயா இருந்துச்சு. ஆக்சுவலா அவருதான் பயப்படுவாருன்னு பார்த்தா நம்ம தான் பயந்து நிக்கிறோம். அப்படியே வந்து சட்டையை டபால்னு புடிச்சிட்டாரு.
அப்படி ஒரு வாய்ப்பு: கவுண்டமணி சாரோட படங்கள் எல்லாம் பார்க்கும்போது நாமும் இவரோடு சேர்ந்து நடிக்கணுமேன்னு நினைச்சேன். அப்படி ஒரு வாய்ப்பைத் தான் டைரக்டர் ராஜகோபால் சார் அமைச்சிக் கொடுத்தார். ஒத்த ஓட்டு முத்தையா படத்துல அரசியல் வராது. ஆனா அரசியல் இருக்கும். பழி வாங்குற கதை. ஆனா பழைய படம் மாதிரி வராது. அண்ணன், தங்கை பாசம் இருக்கும். ஆனா பாசமலர் கிடையாது என்கிறார் ஓஏகே சுந்தர்.
இந்தக் கேரக்டர் மறைந்த நடிகர் மாரிமுத்துவுக்காக நான் எழுதுனது. ஆனா அவருக்குப் பதிலாக இவர் நடிச்சா பொருத்தமா இருக்கும்னு இவரை வரழைச்சேன். சாப்டான வில்லன் கேரக்டர். இவருக்கு ஏற்ற மாதிரி அந்தக் கேரக்டரை மாத்துனேன் என்றார் இயக்குனர் ராஜகோபால்.
கவுண்டமணி அதை விடல: கவுண்டமணி சாரோட நடிக்கும்போது லாஸ்ட் டயலாக் அவருதான் பேசுவாரு. வர்ரேங்க. வான்னு சொல்வாரு. பினிஷிங் அவரோட இதாத்தான் இருக்கும். நாங்க பர்ஸ்ட் மீட் பண்ணும்போது முடிச்சிட்டுப் போகும்போது அவரு பேசிட்டுப் போவாரு. நான் சைலன்டாகத் தான் இருக்கணும். ஆனா மொட்டை ராஜேந்திரன் ஏதோ பேசிட்டுப் போவாரு.
அவருக்காக நான் ஒரு டயலாக் சொன்னேன். ஆனா சாரு அதை விடல. என்ன சொன்னே நீனுன்னு கேட்டாரு. அந்த பினிஷிங் டயலாக் நான் சொன்னேன்னு சொல்ல, அப்படியான்னாரு. அதுக்கு ஏத்தமாதிரி ஒன்மோர் வந்தது. டக்குன்னு அந்த டயலாக்கைத் தூக்கி முன்னாடி போட்டுருங்க நீங்க. அதுக்கு அப்புறம் நான் போறேன்னாரு.
ஒத்த ஓட்டு முத்தையா மாதிரி: இன்னைய வரைக்கும் அவரு காமெடி கிங்குங்கறதை மாற்றவே முடியாது. அவருக்குக் கேரக்டர்ஸை வச்சிக்கிட்டு வெயிட் பண்றாங்க. இந்தப் படம் சூட்டிங் முடியற வரைக்கும் 3 பேர் கதை பண்ண வந்தாங்க. ஆனாலும் ஒத்த ஓட்டு முத்தையா மாதிரி கதை அமையலப்பான்னு சொன்னாரு. அந்த வகையில இந்தப் படம் கண்டிப்பா ஒரு சூப்பர்ஹிட் காமெடி படமா இருக்கும். வயிறு குலுங்க சிரிக்கலாம். குடும்பத்தோட பாருங்க. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.