மதகஜராஜா வெற்றி.. வெள்ளித்திரையில் விரைவில் துருவநட்சத்திரம்.. கௌதம் சொன்ன சூப்பர் தகவல்!..

by ramya suresh |
மதகஜராஜா வெற்றி.. வெள்ளித்திரையில் விரைவில் துருவநட்சத்திரம்.. கௌதம் சொன்ன சூப்பர் தகவல்!..
X

தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த கிளாசிக் இயக்குனராக வளம் வந்தவர் இயக்குனர் கௌதம் மேனன். தமிழ் சினிமாவில் மின்னலே என்ற திரைப்படத்தில் தொடங்கி பல சூப்பர் ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். தற்போது சினிமாவில் இயக்கம் மட்டும் இல்லாமல் திரைப்படங்களிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி நடித்து வருகின்றார். இவர் தற்போது மலையாள சினிமாவிலும் கால் பதித்திருக்கின்றார்.

நடிகர் மம்முட்டியை வைத்து டாமெனிக் என்கின்ற திரைப்படத்தை இயக்கியிருக்கின்றார். இந்த திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று இருக்கின்றது. படம் ரிலீஸ் ஆனதற்கு பிறகும் தொடர்ந்து கௌதம் மேனன் புரமோஷன் நிகழ்ச்சிகளில் ஈடுபட்டு வருகின்றார். இந்த புரமோஷன் நிகழ்ச்சிகள் அனைத்திலும் தான் இயக்கிய துருவ நட்சத்திரம் திரைப்படம் குறித்து தான் அதிக அளவில் பேசி வருகின்றார்.

இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு நடிகர் விக்ரமை வைத்து துருவ நட்சத்திரம் என்ற திரைப்படத்தை இயக்கியிருந்தார். இந்த திரைப்படம் ஒரு ஆக்சன் கலந்த திரில்லர் படமாக இயக்கியிருந்தார் கௌதம் மேனன். மேலும் இப்படத்தின் மூலமாக விக்ரம் மற்றும் கௌதம் மேனன் இணைந்திருந்தது ரசிகர்களிடையே மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

இப்படத்தின் டிரெய்லர் ஒன்று ரிலீசாகி மிகப்பெரிய வரவேற்பை கொடுத்த நிலையில் படத்தை வெள்ளித்திரையில் பார்ப்பதற்கு ரசிகர்கள் பெரும் ஆர்வத்தில் இருந்து வந்தார்கள். ஆனால் இன்று வரை இந்த திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவில்லை. நிதி நெருக்கடி காரணமாக இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்ய முடியாமல் தவித்து வருகின்றார் கௌதம் மேனன்.

இந்த திரைப்படத்தை கடந்த 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரிலீஸ் செய்ய இருப்பதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. ஆனால் அப்போதும் இப்படம் ரிலீஸ் ஆகவில்லை. தற்போது எப்படியாவது இந்த திரைப்படத்தை ரிலீஸ் செய்து விட வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார் கௌதம். அதற்கு காரணம் மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றிதான்.

கடந்த 2013 ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இந்த திரைப்படம் கிட்டத்தட்ட 12 வருடங்களுக்குப் பிறகு கடந்த பொங்கலுக்கு வெளியாகி சூப்பர் ஹிட் அடித்தது. இதனால் துருவ நட்சத்திரம் திரைப்படத்தை எப்படியாவது ரிலீஸ் செய்து விட வேண்டும் என்கின்ற முயற்சியில் ஈடுபட்டு வருகின்றார். இந்நிலையில் சமீபத்திய பேட்டியில் பேசியிருந்த கௌதம் மேனன் துருவ நட்சத்திரம் திரைப்படத்தில் அனைத்து பிரச்சனைகளும் ஒவ்வொன்றாக முடிந்து கொண்டு வருகின்றது.

மதகஜராஜா திரைப்படத்தின் வெற்றியை பார்த்த பலரும் இந்த படத்தை எப்படியாவது வெளியிட்டு விடுவோம் என்கின்ற நம்பிக்கையை கொடுத்து வருகிறார்கள். நிச்சயம் இந்த ஆண்டு சம்மரில் இப்படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிட்டு இருக்கின்றேன் என்று அந்த பேட்டியில் கூறியிருந்தார். ஏற்கனவே விக்ரம் நடிப்பில் உருவாகி இருக்கும் வீரதீரசூரன் திரைப்படம் வரும் மார்ச் மாதம் வெளியாகும் நிலையில் இப்படத்தின் வெற்றி துருவ நட்சத்திரம் திரைப்படத்திற்கு நிச்சயம் உதவியாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story