ஜிவி பிரகாஷ்:
தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக தனது திரைப்பயணத்தை தொடங்கியவர் ஜிவி பிரகாஷ். தமிழில் வெயில் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக தனது திரைபயணத்தை தொடங்கிய இவர் தொடர்ந்து பல ஹிட் பாடல்களை கொடுத்து இருக்கின்றார்.
அதிலும் ஆயிரத்தில் ஒருவன், ஆடுகளம், மயக்கம் என்ன, சூரரைப் போற்று போன்ற படத்தில் இடம்பெற்ற பாடல்கள் இன்றளவும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வருகின்றது. தனது இசையால் பலரையும் கட்டிப்போட்ட ஜிவி பிரகாஷ் சிறந்த பின்னணி பாடகரும் கூட. இவரது பல பாடல்கள் பலரின் மியூசிக் லிஸ்டில் கட்டாயம் இடம் பிடித்திருக்கும்.
நடிகர் அவதாரம்:
இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு வெளிவந்த டார்லிங் என்கின்ற திரைப்படத்தின் மூலமாக கதாநாயகனாக தனது திரைப்படத்தை தொடங்கினார். அதனை தொடர்ந்து நான் ராஜாவாகப் போகிறேன், திரிஷா இல்லனா நயன்தாரா, பென்சில், கடவுள் இருக்கான் குமாரு, 100 சதவீதம், ஜெயில், பேச்சுலர், செல்ஃபி, கள்வன், ரிபெல் உள்ளிட்ட பல திரைப்படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கின்றார்.
இவர் கதாநாயகனாக நடித்த பெரும்பாலான திரைப்படங்கள் தோல்வியை தான் சந்தித்து இருக்கின்றது. இருப்பினும் முயற்சியை கைவிடாமல் அடுத்தடுத்து திரைப்படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான திரைப்படம் டியர். இந்த திரைப்படமும் சுமாரான வரவேற்பை தான் பெற்றிருந்தது.
தீபாவளி ஹிட்:
இசையமைப்பாளராக தொடர்ந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் ஜிவி பிரகாஷ் கடந்த தீபாவளி பண்டிகைக்கு இரண்டு ஹிட் திரைப்படங்களை கொடுத்திருக்கின்றார். ஒன்று தமிழ் சினிமாவில் வெளியான அமரன். மற்றொன்று தெலுங்கில் வெளியான லக்கி பாஸ்கர். இந்த இரண்டு திரைப்படங்களும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அது மட்டுமில்லாமல் இந்த இரண்டு திரைப்படங்களிலும் இருந்த பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பையும் பெற்றது.
ரசிகர்கள் கோரிக்கை:
ஜிவி பிரகாஷ் திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் தொடர்ந்து இசையமைப்பாளராக கவனம் செலுத்தினால் இன்னும் பல வெற்றியை அடையலாம் என்பது ரசிகர்களின் கோரிக்கையாக இருந்து வருகின்றது. அது மட்டும் இல்லாமல் அடுத்தடுத்து ஜிவி பிரகாஷுக்கு வாய்ப்புகள் தமிழ் மற்றும் தெலுங்கு சினிமாவில் குவிந்து கொண்டிருக்கின்றன. இதனால் பாடல்கள் இசையமைப்பதில் படு பிஸியாக இருந்து வருகின்றார் ஜி வி பிரகாஷ்.
ஜிவி பிரகாஷின் முடிவு:
தொடர்ந்து அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்து வருவதால் பேரும், புகழும் ஜிவி பிரகாஷுக்கு தேடி வருகின்றது. இதனால் இனி படங்களை காட்டிலும் இசையமைப்பதில் அதிகம் கவனம் செலுத்துவோம் என்கின்ற முடிவை எடுத்திருக்கின்றாராம். இருப்பினும் வருடத்திற்கு ஒரு திரைப்படமாவது நடித்துவிட வேண்டும் என்கின்ற முடிவையும் எடுத்திருக்கின்றார். இதை கேள்விப்பட்ட ரசிகர்கள் முதல் முடிவில் மட்டும் உறுதியாக இருங்கள். இரண்டாவது முடிவு குறித்து கட்டாயம் யோசியுங்கள் என்று கூறி வருகிறார்கள்.
தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனர்களில் செல்வராகவனும் ஒருவர். அவரது 7ஜி ரெயின்போ காலனி,காதல் கொண்டேன் மற்றும் புதுபேட்டை ஆகிய படங்களை…
தமிழ் சினிமாவில் தற்போது ரீ-ரிலீஸ் ஃபீவர் உச்சத்தில் இருக்கிறது. பல உச்ச நடிகர்களின் படங்கள் ரீ ரிலீ ஸ் செய்யப்பட்டு…
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு வெள்ளிகிழமை என்றாலே படு கொண்டாட்டம் ஆகிவிடுவார்கள். காரணம் அப்போதிலிருந்தே வெள்ளிகிழமை அன்றுதான் புதிய படங்கள் வெளியாகும்.…
கடந்த சில வருடங்களாகவே தமிழ் சினிமாவில் பெரிய நடிகரின் படங்களுக்கு அனிருத்தே இசையமைத்து வருகிறார். ஏ.ஆர் ரஹ்மானிடம் சென்றவர்கள் கூட…
ஓ மை கடவுளே திரைப்படம் மூலம் ரசிகர்களிடம் பிரபலமானவர் இயக்குனர் அஸ்வத் மாரிமுத்து. முதல் படமே சூப்பர் ஹிட். அதன்பின்…
நடிகர் அஜித் குமாருக்கு அனுப்குமார் என்கிற அண்ணனும், அனில் குமார் என்கிற தம்பியும் இருக்கிறார்கள்.. இதில் அண்ணன் அனுப் குமார்…