Categories: Cinema News

ஹீரோ.. மியூசிக் டைரக்டர்!.. கோடி கோடியா கொட்டும் சம்பளம்!.. ஜி.வி. பிரகாஷ் ரேஞ்சே தனி!..

இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமார் இன்று தனது 37வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில் பல பிரபலங்கள் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

ஜி.வி.பிரகாஷ் 2006ம் ஆண்டு வெளியான வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானார். இப்படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதால் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள், மெட்ராஸ், தெறி, அசுரன், சூரரைப் போற்று போன்ற பல வெற்றிப் படங்களுக்கு இசையமைத்துள்ளார். இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

பின்னர் ஜி.வி.பிரகாஷ் டார்லிங் படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார். அதை தொடர்ந்து த்ரிஷா இல்லனா நயந்தாரா, ட்ராபிக் ராமசாமி, சிவப்பு மஞ்சள் பச்சை, பேச்சுலர் போன்ற பல படங்களில் நடித்துள்ளார். மேலும், சில படங்களுக்கு தயாரிப்பாளராகவும் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவர் கயாடு லோஹருடன் நடித்துக்கொண்டிருக்கும் இம்மார்டல் படத்தின் ஃபர்ஸ்ட் லூக் போஸ்டரை சமீபத்தில் வெளியிட்டிருந்தார்.

ஜி.வி.பிரகாஷ் பாடகி சைந்தவியை திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது. சென்ற ஆண்டு இவர்களுக்கிடையே இருந்த கருத்து வேறுபாடு காரண்மாக விவாகரத்து செய்துக்கொண்டனர். சூர்யாவின் சூரரைப்போற்று படத்தில் இவரது இசை உலகளவில் பாராட்டுபெற்ற நிலையில் தற்போது வாடிவாசல் படத்திற்கும் இசையமைத்து வருகிறார். ஒரு படத்திற்கு ரூ 4 கோடி வரை சம்பளம் வாங்கும் இவரது சொத்து மதிப்பு ரூ. 50 முதல் 60 கோடி வரை இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. ஆனால், அதுதொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இல்லை.

இன்று ஜூன் 13ம் தேதி தனது 37வது பிறந்த நாளை கொண்டாடி வரும் ஜி.வி.பிரகாஷ் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவருடைய புகைப்படத்தை ஷேர் செய்து வாழ்த்துக்கள் தெரிவித்த அனைவருக்கும் நன்றி என பதிவிட்டுள்ளார்.

Published by
Saranya M