ரொம்பவும் ஸ்பெஷலான படம்!.. தனது ஆட்டத்தை தொடங்கிய ஜிவி.. தரமான சம்பவம் லோடிங்..!

by ramya suresh |
ரொம்பவும் ஸ்பெஷலான படம்!.. தனது ஆட்டத்தை தொடங்கிய ஜிவி.. தரமான சம்பவம் லோடிங்..!
X

Actor Ajith: தமிழ் சினிமாவில் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான திரைப்படம் விடாமுயற்சி. நடிகர் அஜித்தை திரையரங்கில் பார்த்து இரண்டு வருடங்களான ரசிகர்களுக்கு விடாமுயற்சி ரிலீஸ் மிகப் பெரிய கொண்டாட்டத்தை கொடுத்தது. ஆனால் படம் ரசிகர்களிடையே சற்று ஏமாற்றத்தை தான் ஏற்படுத்தி இருந்தது. விடாமுயற்சி திரைப்படத்தில் அஜித் மாஸ் காட்சிகள் கம்மியாக இருப்பதாக அவரின் ரசிகர்கள் தொடர்ந்து தங்களது கருத்துக்களை பதிவு செய்துள்ளார்கள்.

குட் பேட் அக்லி: விடாமுயற்சியின் ரசிகர்கள் எதிர்பார்த்த அஜித்தை பார்க்க முடியவில்லை என்கின்ற வருத்தத்தில் இருப்பதால் அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் குட் பேட் அக்லி திரைப்படத்தின் மீது எக்கச்சக்கமான எதிர்பார்ப்பு இருக்கின்றது. இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை நிச்சயம் பூர்த்தி செய்யும் என்கின்ற நம்பிக்கை இருக்கின்றது.

இந்த திரைப்படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கி இருக்கின்றார். இவர் கடைசியாக இயக்கிய மார்க் ஆண்டனி திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. இதனை தொடர்ந்து நடிகர் அஜித்தை வைத்து குட் பேட் அக்லி என்கின்ற திரைப்படத்தை இயக்கினார். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து இருக்கின்றது.

படம் நிச்சயம் தரமான ஃபேன் பாய் சம்பவமாக இருக்கும் என்று கூறப்படுகின்றது. படத்தில் நடிகர் அஜித்தின் லுக் மற்றும் கெட்டப்புகள் மிகப்பெரிய வரவேற்பை பெற்றிருக்கின்றது. இதனால் படத்தின் மீது ஏகப்பட்ட எதிர்பார்ப்பு நிலவி வருகின்றது.

ஜிவி பிரகாஷ் இசை: குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து வந்த நிலையில் பின்னர் சில பிரச்சனைகள் காரணமாக படத்தில் இருந்து அவர் விலகி விட்டார். தற்போது ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்து வருகிறார். இப்படத்தின் இசைப் பணிகளை துவங்கி இருக்கும் ஜிவி பிரகாஷ் தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கின்றார்.

அதில் அவர் தெரிவித்திருந்ததாவது 'மிகவும் ஸ்பெஷலான படத்திற்கு இசையமைக்கும் பணியை இன்று துவங்கியிருக்கின்றேன். God Bless U.. Fire starts NOW என்று மறைமுகமாக பதிவிட்டு இருக்கின்றார். இதை பார்த்து ரசிகர்கள் ஜிவி பிரகாஷுக்கு தொடர்ந்து வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

சமீப நாட்களாக ஜிவி பிரகாஷ் இசையில் வெளிவந்த படங்கள் அனைத்துமே மிகப்பெரிய வெற்றியை கொடுத்து வந்தது. இந்த திரைப்படமும் நிச்சயம் மிக சிறப்பாக இருக்கும் என்று கூறி வருகிறார்கள். மேலும் இந்த திரைப்பட வருகிற ஏப்ரல் 10ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது. விடாமுயற்சி திரைப்படம் ரசிகர்களிடையே கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில் நிச்சயம் குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

Next Story