போட்றா வெடிய!. வாடிவாசல் ஸ்டார்ட்!.. ஜி.வி.பிரகாஷ் வெளியிட்ட செம போட்டோ!.

Vaadivaasal
Vaadivaasal: தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக இருப்பவர் வெற்றிமாறன். இவரின் இயக்கத்தில், கலைப்புலி தாணு தயாரிப்பில் சூர்யா நடிக்க வாடிவாசல் என்கிற படம் 4 வருடங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. வாடிவாசல் அருகே சூர்யா ஜல்லிக்காட்டு மாட்டை பிடித்துக்கொண்டு நிற்பது போல புகைப்படங்களும் வெளியானது. மேலும், இந்த படம் தொடர்பான போஸ்டரும் ரசிகர்களிடம் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அதோடு, ஒரு ஜல்லிக்காட்டை மாட்டை விலைக்கு வாங்கிய சூர்யா தனது வீட்டிலேயே ஜல்லிக்கட்டு தொடர்பான பயிற்சியையும் எடுத்து வந்தார். ஆனால், வாடிவாசல் அறிவிப்போடு நின்றுவிட்டது. அதன்பின் விடுதலை படத்தை துவங்கினார் வெற்றிமாறன். அந்த படத்தை ஒன்றரை வருடத்திற்கும் மேல் எடுத்தார். அது ஹிட் அடிக்கவே விடுதலை 2 படத்தையும் எடுக்க துவங்கினார். இப்படியே 4 வருடங்கள் ஓடிவிட்டது.
சூர்யாவும் ஜெய்பீம், எதற்கும் துணிந்தவன், கங்குவா, ரெட்ரோ, ஆர்.ஜே.பாலாஜியுடன் ஒரு படம் என தொடர்ந்து நடித்துகொண்டே இருக்கிறார். எனவே, வெற்றிமாறன் எப்போதுதான் வாடிவாசல் படத்தை எடுப்பார் என்கிற கேள்வி சமூகவலைத்தளங்களில் எழுந்துகொண்டே இருந்தது. இடையில் இந்த படத்திலிருந்து சூர்யா விலகிவிட்டார் எனவும் சொல்லப்பட்டது.
எனவே, வேறு நடிகரை வைத்து வாடிவாசல் படத்தை வெற்றிமாறன் எடுப்பார் எனவும் பேசப்பட்டது. மேலும், படத்தின் முழுக்கதையையும் கொடுத்தால் மட்டுமே நடிப்பேன் என வெற்றிமாறனிடம் சூர்யா சொன்னதாகவும் செய்திகள் வெளியானது. அதோடு,ஆர்.ஜே.பாலாஜி படத்தை முடித்துவிட்டு லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்கவுள்ளார்.
எனவே, வாடிவாசல் டேக் ஆப் ஆகுமா இல்லையா என்பதே குழப்பமாக இருந்தது. இந்நிலையில்தான் வாடிவாசல் படத்திற்கான பாடல் கம்போசிங் ஸ்டார்ட் என பதிவிட்டு ஜிவி பிரகாஷ் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். இதைப்பார்க்கும்போது வெங்கி அட்லுரி இயக்கத்தில் உருவாகும் படத்தை முடித்துவிட்டு வாடிவாசல் படத்தில் சூர்யா நடிப்பார் என்றே நம்பப்படுகிறது. எப்படியோ வாடிவாசல் படத்தின் வேலைகள் துவங்கியது சூர்யா ரசிகர்களுக்கு உற்சாகத்தை கொடுத்திருக்கிறது.