GV Prakash: தமிழ் சினிமாவில் தற்போது பிஸியான இசையமைப்பாளராக வளம் வருகின்றார் ஜிவி பிரகாஷ். வெயில் திரைப்படத்தின் மூலமாக தனது சினிமா பயணத்தை தொடங்கிய ஜிவி பிரகாஷ் பின்னர் பல திரைப்படங்களுக்கு மிகச்சிறந்த இசையை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக மாறினார். அதிலும் இவர் இசையில் வெளிவந்த ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, ஆடுகளம் உள்ளிட்ட திரைப்படங்கள் மிகப்பெரிய ஹிட் கொடுத்தது.
படங்களில் ஹீரோ: தொடர்ந்து முன்னணி இசையமைப்பாளராக வளம் வந்த ஜிவி பிரகாஷ் திடீரென்று படங்களில் ஹீரோவாக நடிக்கப் போவதாக அறிவித்தார். அதன்படி டார்லிங் என்ற திரைப்படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமான ஜிவி பிரகாஷ் பெரிய அளவுக்கு ஹிட் திரைப்படங்களை கொடுக்கவில்லை. இருப்பினும் தொடர்ந்து ஹீரோவாக படங்களில் கமிட்டாகி நடித்து வருகின்றார்.
பிசியான ஜிவி பிரகாஷ்: ஒரு பக்கம் படங்களில் பிசியாக நடித்து வந்தாலும் மற்றொரு பக்கம் இசையமைப்பாளராகவும் இருந்து வந்தார் ஜிவி பிரகாஷ். அந்த வகையில் கடந்தாண்டு இவரது இசையில் வெளிவந்த 2 திரைப்படங்கள் பிளாக்பஸ்டர் ஹிட் கொடுத்தது. தமிழில் வெளியான அமரன் திரைப்படமும், தெலுங்கில் வெளியான லக்கி பாஸ்கர் திரைப்படமும் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது.
இதனால் ஜிவி பிரகாஷுக்கு தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து வருகின்றன. தனது கைவசம் ஏகப்பட்ட திரைப்படங்களை வைத்திருக்கின்றார் ஜிவி பிரகாஷ் தற்போது தனுஷின் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கிட்ட திரைப்படத்திற்கு இசையமைத்து இருக்கின்றார். அதனைத் தொடர்ந்து இட்லி கடை என்கின்ற திரைப்படத்திற்கும் ஜிவி தான் இசையமைத்திருக்கின்றார். இது மட்டும் இல்லாமல் நடிகர் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்திற்கும், சிவகார்த்திகேயனின் பராசக்தி திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகின்றார்.
NEEK ஆடியோ லான்ச்: நடிகர் தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கின்றார்.. இந்த திரைப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கின்றது இந்த திரைப்படத்திலிருந்து வெளிவந்த அனைத்து பாடல்களுமே மிகப்பெரிய ஹிட்டாகி இருக்கின்றது.
இந்நிலையில் இன்று நடைபெற்ற ஆடியோ லாஞ்சில் ஜிவி பிரகாஷ் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் நடிகர் தனுஷின் மேனேஜர் ஸ்ரேயாஸ் பேசும்போது இப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் ஒரு ரூபாய் கூட சம்பளம் வாங்கவில்லை. படம் முடியட்டும் பார்த்துக் கொள்ளலாம் என்று கூறியிருந்தார். பாடல்கள் அனைத்துமே மிகச் சிறப்பாக வந்திருக்கின்றது.
நிச்சயம் இதற்கு அடுத்து சம்பளம் கேட்பார் என்று நினைக்கிறேன் என்று விளையாட்டாக பேசினார். அதற்கு பிறகு பேசிய ஜிவி பிரகாஷ் முதன்முறையாக தனுஷ் சார் இயக்கத்தில் ஒரு படத்தில் பணியாற்றி இருக்கின்றேன். படம் மிகச் சிறப்பாக வந்திருக்கிறது. ஸ்ரேயாஸ் கூறினார் நான் சம்பளம் வாங்கவில்லை என்று, அது உண்மைதான்.
ஆனால் ஜெயிலர் திரைப்படம் முடிந்த பிறகு படத்தில் பணியாற்றியவர்களை அழைத்து மிகச் சிறப்பாக கவனித்தார்கள். அதேபோல் இப்படத்தின் ரிலீஸ்-க்கு பிறகு என்னையும் கவனிப்பார்கள் என்று நம்புகிறேன். படம் நிச்சயம் மிகப்பெரிய ஹிட் அடிக்கும் என்று தெரிந்துவிட்டது. அதனால் எனக்கு மிகப்பெரிய கவனிப்பு இருக்கின்றது’ என்று பேசி இருந்தார்.
தமிழ் சினிமாவில்…
நேற்றிலிருந்து அஜித்…
சிவகார்த்திகேயன், ரவி…
தமிழ் சினிமாவில்…
அமராவதி திரைப்படம்…