Categories: Cinema News latest news

ரிங்க்டோனை மாற்றும் டைம் வந்துருச்சு.. செம பெஸ்ட்டா இருக்கும்!.. ஓவர்ஹைப் கொடுக்கும் ஜீவி..

நடிகர் அஜித்:

தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் நடிகர் அஜித். இவர் தற்போது விடாமுயற்சி மற்றும் குட் பேட் அக்லி என்ற 2 திரைப்படங்களில் நடித்து வருகின்றார். இதில் விடாமுயற்சி திரைப்படம் கடந்த 2 வருடங்களாக எடுக்கப்பட்டு வந்த நிலையில் வரும் பொங்கலுக்கு வெளியாகும் என்று கூறப்படுகிறது.

குட் பேட் அக்லி:

விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருந்தபோது நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் குட் பேட் அக்லி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகின்றது. படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்துவிட்டது. இப்படம் தான் முதலில் பொங்கலுக்கு வெளியாக உள்ளதாக கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படம் காரணமாக மே மாதத்திற்கு படத்தின் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.

குட் பேட் அக்லி பிரச்சனை:

குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு முதலில் தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி வந்தது. ஆனால் கடைசி நேரத்தில் குட் பேட் அக்லி படத்திலிருந்து இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் விலகி இருந்தார். அவருக்கு பதிலாக தற்போது ஆதிக் ரவிச்சந்திரன் அவர்களின் ஆஸ்தான இசையமைப்பாளரான ஜிவி பிரகாஷ் படத்திற்கு இசையமைத்து வருகின்றார். இதனை பட குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை என்றாலும் சமீபத்திய பதிவில் ஜிவி பிரகாஷ் இதனை உறுதிப்படுத்தி இருந்தார்.

ஜிவி பிரகாஷ் பேட்டி:

இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் ஜிவி பிரகாஷ் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து சில விஷயங்களை பகிர்ந்து இருந்தார். அவர் நேரடியாக எந்த விஷயத்தையும் கூறவில்லை என்றாலும் மறைமுகமாக ரசிகர்களுக்கு அப்டேட் கொடுத்திருந்தார். தற்பொழுது ஒரு பெரிய ஸ்டாலின் படத்திற்கு இசையமைத்து வருகிறேன். அதை வெளிப்படையாக தற்போது என்னால் கூற முடியாது.

தயாரிப்பு நிறுவனம் அறிவித்த பிறகு நான் இதை பேசுகிறேன். இருந்தாலும் அந்த ஸ்டாரின் படங்களின் பின்னணி இசையிலேயே பெஸ்டான பின்னணி இசையாக இது நிச்சயம் இருக்கும். அவர்களின் ரசிகர்கள் ரிங்டோனை மாற்ற வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று நம்பிக்கையாக பேசி இருந்தார்.

தமிழ் சினிமாவில் தற்போது பிரபல இசையமைப்பாளராக வலம் வந்து கொண்டிருக்கிறார் ஜிவி பிரகாஷ். கடைசியாக இவர் இசையமைத்த அமரன் திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது. அதேபோல் தெலுங்கில் இவர் இசையமைத்த லக்கி பாஸ்கர் திரைப்படமும் மிகச் சிறந்த வெற்றியை கொடுத்திருந்தது. இதனால் சினிமாவில் அடுத்தடுத்த திரைப்படங்களில் கமிட்டாகி பிஸியாக இசையமைத்து வருகின்றார் ஜி வி பிரகாஷ்.

Published by
ramya suresh