பிஜிஎம்-க்கு டான்ஸ் சூட் பண்ணா எப்படி இருக்கும்?.. அஜித் ரசிகர்களுக்கு ட்ரீட் கொடுத்த ஜிவி..!

அடுத்த வருட பொங்கலுக்கு மிகப்பெரிய செலிப்ரேஷன் இருக்கின்றது. ஏனென்றால் அஜித்தின் திரைப்படம் வெளியாக உள்ளது. கடந்த இரண்டு வருடத்திற்கு முன்பு பொங்கல் பண்டிகைக்கு அஜித்தின் துணிவு திரைப்படம் வெளியானது. அதனைத் தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் கழித்து அஜித் திரைப்படம் வெளியாக இருப்பதால் அஜித் ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
துணிவு திரைப்படத்தை முடித்த கையுடன் நடிகர் அஜித் கமிட்டான திரைப்படம் தான் விடாமுயற்சி. லைக்கா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இந்த திரைப்படத்தை இயக்கி வந்தார். ஒரு நாளில் நடக்கும் கதையை மையமாக வைத்து படத்தை எடுத்து வந்தார்கள். படத்தில் ஏற்பட்ட பல்வேறு பிரச்சனைகள் காரணமாக படத்தை முடிக்க 2 ஆண்டுகள் ஆகிவிட்டது.
இந்த திரைப்படத்தை முடிப்பதற்குள் நடிகர் அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட்டாகி அந்த திரைப்படமும் 90% முடிவடைந்துவிட்டது. சமீபத்தில் தான் விடாமுயற்சி திரைப்படத்தின் டீசர் வெளியானது. அடுத்த ஆண்டு பொங்கலுக்கு படம் வெளியாவது 90% உறுதியாகிவிட்டது.
இந்த திரைப்படத்தின் ஒரு பாடல் காட்சி மற்றும் பேட்ச் ஒர்க் மட்டும் மீதம் இருப்பதால் அதையெல்லாம் முடித்துவிட்டு படத்தை பொங்கலுக்கு ரிலீசாக வேண்டும் என்ற முடிவில் படக்குழுவினர் தீவிரமாக இறங்கி இருக்கிறார்கள். இது அஜித் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
விடாமுயற்சி திரைப்படத்தை தாண்டி அதிகம் எதிர்பார்ப்பது அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படத்தை தான். ஏனென்றால் இந்த திரைப்படம் ஆரம்பமான முதலே இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் அடுத்தடுத்த அப்டேட்டுகள் மற்றும் அஜித்தின் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்ச்சிப்படுத்தி வந்தார். மேலும் இந்த திரைப்படத்தில் அஜித்தின் லுக் செம மாஸாக இருந்தது.
இதனால் இப்படத்தை காண்பதற்கு ரசிகர்கள் மிகுந்த ஆர்வமுடன் இருந்து வருகிறார்கள். இந்த திரைப்படத்தை மைத்ரி மூவிஸ் மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றது. முதலில் இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளராக தேவி ஸ்ரீ பிரசாத் இருந்து வந்தார். அவர் தற்போது விலகிய நிலையில் அவருக்கு பதிலாக ஜிவி பிரகாஷ் இசையமைத்து வருகின்றார். இது தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகவில்லை என்றாலும் அவர்தான் இசையமைப்பாளர் என்பது உறுதியாகிவிட்டது.
இந்நிலையில் அஜித்தின் குட் பேட் அக்லி திரைப்படம் குறித்து ஜிவி பிரகாஷ் ஒரு பதிவை வெளியிட்டு இருக்கின்றார். அதில் அவர் தெரிவித்திருந்ததாவது ' celebration of life மாதிரி ஒரு பாடலுக்கு டான்ஸ் ஷூட் பண்ணா எப்படி இருக்கும் ? செமையா இருக்கும்ல'.. என்று தெரிவித்து இருக்கின்றார். இதை பார்த்த ரசிகர்கள் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.
மேலும் குட் பேட் அக்லி திரைப்படம் வருகிற மே மாதம் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. அதுமட்டுமில்லாமல் நாளை விடாமுயற்சி திரைப்படத்தின் முதல் பாடல் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகின்றது.