என்னை டாப்புக்கு கொண்டு போனதே அந்த படம்தான்... மீண்டும் செல்வராகவனுடன்... ஜிவி கொடுத்த அப்டேட்..!

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:29:56  )

தமிழ் சினிமாவில் ஒரு இசையமைப்பாளராக அறிமுகமாகி தற்போது நடிகர், பாடகர், தயாரிப்பாளர் என பன்முகத்தன்மை கொண்டவராக மாறி இருக்கின்றார். என்னதான் படங்களில் நடித்து வந்தாலும் இவரது படங்களை காட்டிலும் இசைக்கு தான் பலரும் அடிமை. இவரது இசையில் வெளிவந்த பல பாடல்கள் இன்றும் பலரின் ப்ளே லிஸ்டில் இருக்கும்.

ஏ ஆர் ரகுமான் எப்படி தனது தனிப்பட்ட இசையால் மிகப் பிரபலமாக பார்க்கப்படுகின்றாரோ அதேபோல் தான் ஜிவி பிரகாஷ், இவரது இசைக்கு என்று ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளம் இருக்கின்றது. அடுத்தடுத்து பெரிய திரைப்படங்களில் இசையமைத்து பலரின் கவனத்தை பெற்றிருக்கின்றார். இந்த பொங்கலுக்கு இவரது இசையில் உருவான இரண்டு திரைப்படங்கள் வெளியாகி சக்க போடு போட்டு வருகின்றது.

சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படத்தில் இவரது பாடல் மற்றும் பிஜிஎம் ரசிகர்களை மயக்க வைத்துள்ளது. அமரன் திரைப்படத்தில் மிக ரொமான்டிக்காக மியூசிக் போட்டு பலரையும் ஆச்சரியப்படுத்திய ஜிவி பிரகாஷ் அதற்கு நேராக லக்கி பாஸ்கர் திரைப்படத்தில் விறுவிறுப்பான பிஜிஎம்மில் அசதி இருக்கின்றார். இரண்டு திரைப்படங்களுமே மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளது.

அடுத்ததாக நடிகர் தனுஷ் இயக்கி இருக்கும் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற படத்திலும், தனுஷின் 4வது படமான இட்லி கடை திரைப்படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசையமைத்து வருகின்றார். சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர் பல விஷயங்களை பகிர்ந்திருந்தார்.

அதில் அவர் கூறியதாவது 'சக்ஸஸ்புள் இசையமைப்பாளர் என்ற கேட்டகிரியிலிருந்து ஒரு முன்னணி இசையமைப்பாளராக தன்னை மாற்றியது ஆயிரத்தில் ஒருவன் மற்றும் மயக்கம் என்ன என இரண்டு திரைப்படங்கள்தான். அந்த படத்துக்காக தன்னை தேர்வு செய்ததற்கு செல்வராகவன் அவர்களுக்கு மிக்க நன்றி. நான் தற்போது முன்னணி படங்களில் இசையமைக்கிறேன் என்றால் அதற்கு முக்கிய காரணம் செல்வராகவன் தான்.

அடுத்ததாக செல்வராகவன் இயக்கத்தில் ஒரு புதிய படத்தில் இணைய இருக்கின்றேன். அந்த படமும் ரசிகர்களுக்கு மிகப்பெரிய விருந்தாக இருக்கும்' என்று கூறி இருக்கின்றார். இந்த படத்தை மிக விரும்பி செல்வராகவன் இயக்கி வருவதாகவும் இப்படத்தின் அப்டேட் விரைவில் வெளியாகும் என்று கூறியிருக்கின்றார்.

இந்த செய்தி ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது. சமீபத்தில் நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் என்கின்ற திரைப்படத்திலிருந்து வெளியான ஃபர்ஸ்ட் சிங்கள் யூட்யூபில் ட்ரெண்டிங்கில் உள்ளது. இந்த திரைப்படமும் நடிகர் தனுஷுக்கு மிகச் சிறந்த படமாக இருக்கும் எனவும் அவர் கூறியிருக்கின்றார்.

Next Story