Categories: Cinema News latest news

வாடிவாசல் ரெடி!.. சூர்யாவின் 2 படங்களுக்கு நான்தான்!.. செம அப்டேட் கொடுத்த ஜிவி பிரகாஷ்..

GV Prakash: வெயில் திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் ஜிவி பிரகாஷ். முதல் படத்திலேயே இனிமையான பாடல்களை கொடுத்து ரசிகர்களை ஈர்த்தார். இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரி ரெஹானவின் மகன் இவர். இசையை முறையாக கற்று அதில் பல பட்டங்களை பெற்று இசைத்துறைக்கு வந்திருக்கிறார்.

விஜய் அஜித் ரஜினி: வெயில் படத்திற்கு பின் தொடர்ந்து பல படங்களுக்கும் இசையமைத்தார். சினிமாவுக்கு வந்த புதிதிலேயே ரஜினியின் குசேலன் படத்திற்கு இசையமைத்தார். அதன்பின் விஜய், அஜித், விக்ரம் என பலரின் படங்களுக்கும் இசையமைத்து முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவராக மாறினார்.

சூரரைப்போற்று: செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ற போன்ற படங்களின் பாடல்கள் இவரை ரசிகர்களிடம் பிரபலமாக்கியது. அதேபோல், வெற்றிமாறன் – தனுஷ் கூட்டணியில் உருவான பொல்லாதவன், ஆடுகளம், அசுரன் போன்ற படங்களுக்கும் ஜிவி பிரகாஷே இசையமைத்திருக்கிறார். சுதாகொங்கரா – சூர்யா கூட்டணியில் வெளிவந்த சூரரைப்போற்று படத்திற்காக சிறந்த பின்னணி இசைக்கான தேசிய விருதையும் பெற்றிருக்கிறார்.

ஒருபக்கம், கடந்த 10 வருடங்களாகவே திரைப்படங்களில் நடித்தும் வருகிறார். மிகவும் குறுகிய காலத்தில் அதிக படங்களில் நடித்த நடிகரும் இவர்தான். நடிகர், பாடகர், இசையமைப்பாளர், தயாரிப்பாளர் என பல முகங்களை கொண்டவர் இவர். இவர் தயாரித்து நடித்துள்ள கிங்ஸ்டன் திரைப்படம் வருகிற மார்ச் மாதம் 7ம் தேதி வெளியாகவுள்ளது.

வாடிவாசல் அப்டேட்: எனவே, இது தொடர்பான புரமோஷனுக்காக பல ஊடகங்களுக்கும் தொடர்ந்து பேட்டி கொடுத்து வருகிறார். அப்படி அவர் கொடுத்த ஒரு பேட்டியில் வாடிவாசல் படம் பற்றி கேட்கப்பட்டது. அதற்கு பதில் சொன்ன ஜிவி பிரகாஷ் ‘ வாடிவாசல் வந்து கொண்டே இருக்கிறது. விரைவில் அப்படத்திற்கான கம்போஸிங்கை துவங்கலாம் என வெற்றிமாறன் சொல்லியிருக்கிறார். அதேபோல், லக்கி பாஸ்கர் பட இயக்குனர் வெங்கி அட்லுரி இயக்கத்தில் அடுத்து சூர்யா சார் நடிக்கவுள்ள படத்திற்கும் நான்தான் இசையமைக்கிறேன்’ என சொல்லியிருக்கிறார். ஒருபக்கம், அஜித்தின் குட் பேட் அக்லி படத்திற்கும் ஜிவி பிரகாஷ்தான் இசை என்பது குறிப்பிடத்தக்கது.

Published by
சிவா