Cinema News
விஜயுடன் 10 முறை முட்டிக்கிச்சாம்! ஹாரிஸ் ஜெயராஜ் ஃபீல்டு அவுட்டாக காரணமே இதுதானா?..
மின்னலே, காக்க காக்க, லேசா லேசா என தனது இனிமையான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜ் ,மின்னலே படத்தின் மூலம் தான் இவர் முதன் முதலாக இசையமைப்பாளராக அறிமுகமானார், அதற்கு முன்பாகவே கீபோர்டு பிளேயராக பல படங்களில் இவர் வேலை செய்திருக்கிறார். ஆனால் இவருக்கு பிறகு வந்த அனிருத், அபயங்கர் போன்ற இசையமைப்பாளர்கள் ஒரு பெரிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள்.
ஏன் நேற்று வந்த அபயங்கள் கூட சூர்யாவின் படத்திற்கு இப்போது இசை அமைப்பாளராக மாறி இருக்கிறார். ஆனால் காக்க காக்க படத்தில் அனைத்து பாடல்களையும் சூப்பர் ஹிட் ஆக கொடுத்த ஹாரிஸ் ஜெயராஜ் இன்னும் அந்த லைம் லைட்டில் வரவே முடியவில்லை. இளையராஜா, ஏ ஆர் ரகுமான் இவர்கள் வரிசையில் கண்டிப்பாக இருக்கக்கூடிய இசை அமைப்பாளர் தான் ஹாரிஸ் ஜெயராஜ்.
ஆனால் ஏன் இந்த ஒரு பெரிய இடைவெளி என்பதுதான் அனைவரின் கேள்வியாக இருக்கிறது .சமீபத்தில் அவர் ஒரு சேனலுக்கு பேட்டி கொடுத்தபோது பல விஷயங்களை பகிர்ந்து இருக்கிறார். அது கேட்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. ஆரம்ப காலங்களில் இளையராஜா ஒரே நேரத்தில் 10 படங்களுக்கு எல்லாம் இசை அமைத்திருக்கிறார் .அப்படித்தான் அவர் இன்று இசைஞானியாக இந்தியா முழுவதும் பேசப்படுகிறார்.
ஆனால் ஹாரிஸ் ஜெயராஜை பொருத்தவரைக்கும் ஒரே நேரத்தில் பல படங்களை ஒப்பந்தம் செய்வது என்பது ஒரு பெரிய தண்டனை எனக் கூறியிருக்கிறார். ஒரு படத்திற்கு பாட்டு போட்டுக் கொண்டிருப்பேன், இன்னொரு படத்திற்காக வந்து காத்திருப்பார்கள் ,மேலே காத்திருப்பார்கள் ,கீழே உட்கார்ந்து இருப்பார்கள் .இப்படி எல்லாம் அவர்களை காக்க வைப்பது அது ஒரு பெரிய தண்டனை .
அதனால்தான் விஜயின் 10 படங்களுக்கு இசையமைக்கும் வாய்ப்பு வந்தும் நான் அதை நிராகரித்து விட்டேன். 11 வது படமாக வந்தது தான் நண்பன் திரைப்படம். ஒரு டியூன் போடும் பொழுது முதல் முறையே சரியான டியூன் வந்து விடாது. நான்கு, ஐந்து முறை முயற்சி செய்ய வேண்டும் .அதனால் ஒரு படத்திற்கு என பார்க்கும் பொழுது கொஞ்சம் தாமதமாக வாய்ப்பிருக்கிறது.
அந்த நேரத்தில் இன்னொரு படத்தை கமிட் செய்து விட்டால் அது எனக்கு பெரிய பிரச்சினையாகிவிடும் .அதனால் ஒரு முடிவை எடுக்க வேண்டும் என்றால் பத்தாயிரம் முறை யோசிக்க வேண்டும் என்று நான் எப்பொழுதுமே என் மகனிடம் சொல்வேன். ஆன்மாவிற்காக மட்டுமே நாம் உழைக்க வேண்டும்.வயிற்றுக்காக என்று நாம் உழைக்கக் கூடாது என்றெல்லாம் அந்த பேட்டியில் கூறி இருக்கிறார். இதை பார்த்த ரசிகர்கள் ஓ இதனால் தான் அவர் அடுத்தடுத்து படங்களில் இசையமைக்க முடியலையோ என கூறி வருகின்றனர்.