வெற்றிமாறனின் அடுத்த ஹீரோ இவர்தானாம்… கேட்க நல்லாதான் இருக்கு.. ஆனா நடக்குமா?

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:37:16  )

JayamRavi: கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக இருக்கும் வெற்றிமாறன் இயக்கத்தில் அடுத்த உருவாக இருக்கும் படம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி இருக்கிறது

இயக்குனர் பாலு மகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர் வெற்றிமாறன். தனுஷ் இயக்கத்தில் பொல்லாதவன் திரைப்படத்தினை இயக்கியவர். முதல் படமே மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதை தொடர்ந்து ஆடுகளம் திரைப்படத்தினை இயக்கினார்.

இதை தொடர்ந்து விசாரணை, வட சென்னை, அசுரன் உள்ளிட்ட படங்களை இயக்கி இருந்தார். பெரும்பாலும் வெற்றிமாறன் திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றது. பல திரைப்பட விழாக்களில் விருதுகளை குவித்து இருந்தது.

கடந்தாண்டு விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை படத்தினை இயக்கி இருந்தார். இப்படம் ரசிகர்களிடம் சூப்பர்ஹிட்டை பெற்றது. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இந்த வருடத்தின் தொடக்கத்திலேயே ஷூட்டிங் முடிந்துவிடும் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் இன்னமும் விடுதலை இரண்டாம் பாகம் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இப்படத்தில் மஞ்சுவாரியர் மற்றும் விஜய் சேதுபதிக்கு முக்கிய வேடம் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து வாடிவாசல் படம் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதையடுத்து ஜூனியர் என்டிஆர் படத்தினை வெற்றிமாறன் இயக்குவார் என தகவல்கள் தெரிவிக்கிறது.

இந்நிலையில் ஜெயம்ரவி தன்னுடைய பேட்டியில் நான் பெரும்பாலும் நல்ல இயக்குனர்களுக்கு கால் செய்து படம் பண்ணலாமா எனக் கேட்டதே இல்லை. ஆனால் சமீபத்தில்தான் வெற்றிமாறனை சந்தித்து படம் பண்ணலாமா எனக் கேட்டேன். அவர் ரவி நான் சில படங்களில் ஒப்பந்தமாகி இருக்கேன்.

அதையெல்லாம் முடித்துவிட்டு வருகிறேன். படம் பண்ணலாம் எனக் கூறினார். விரைவில் அவரிடம் கதையும் கேட்க இருக்கிறேன். தயாரிப்பாளர் இதை முன்னாடியே சொல்வதுக்கு கூட என்னை திட்டலாம். ஆனால் சினிமாவில் எதையும் மறைக்க முடியாதே எனவும் குறிப்பிட்டு இருக்கிறார்.

Next Story