டாப் ஹீரோயின்களுக்கு தலைல அடிக்கிற மாதிரி சொன்ன நமீதா.. இத எதிர்பார்க்கவே இல்ல

by ராம் சுதன் |

சினிமாவில் ஆரம்பத்தில் க்ளாமருக்கு என ஒரு தனி க்ரேஸ் இருந்து வந்தது. ஆனால் சமீபகாலமாக காமெடிக்கே ஒரு மரியாதை இல்லாத போது எங்கு க்ளாமருக்கு இருக்க போகிறது? அந்தளவுக்கு வெளியாகும் பெரும்பாலான படங்கள் முழுக்க வன்முறையை தூண்டும் படங்களாகவேத்தான் வெளியாகின்றன.

இதில் க்ளாமருக்கு என தனி இடம் எங்கே கொடுக்க போகிறார்கள். சில்க் ஸ்மிதா இருந்த காலத்தில் அவருக்கான ஒரு பாடல் இருந்தால்தான் படத்தையே வாங்குவோம் என திரையரங்கு உரிமையாளர்கள், வினியோகஸ்தரர்கள் கூறி வந்தார்கள். ஆனால் இப்போதைய நிலை? முழுவதுமாக மாறியிருக்கின்றது.

இந்த நிலையில் சில்க் வரிசையில் எண்ணற்ற பல நடிகைகள் ஐட்டம் பாடலுக்கு என தொடர்ந்து வந்து கொண்டே இருந்தனர். ஜோதிமீனா, விசித்ரா என பல நடிகைகளை சொல்லிக் கொண்டே போகலாம். இவர்கள் வரிசையில் 2000களில் க்ளாமர் குயினாக ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நமீதா.

நமீதா என்று சொன்னாலே மச்சான் என்றுதான் நியாபகத்திற்கு வரும். நமீதா சினிமா இண்டஸ்டிரியில் இருக்கும் வரை மச்சான் என்ற வார்த்தை ஒலித்துக் கொண்டே இருந்தது. ஆனால் இப்போது அவருக்கான இடம் காலியாகவே கிடக்கிறது.

நமீதா ஒரு தொழிலதிபரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரட்டைக் குழந்தைகள் பிறந்த நிலையில் குடும்பம், கணவன்,குழந்தைகள் என முழுக்க முழுக்க ஒரு குடும்ப பெண்ணாகவே மாறினார் நமீதா. ஆனால் இப்போது மீண்டும் நடிக்க வருவதாக அவரே சொல்லியிருக்கிறார்.

ஆனால் ஒரு கண்டீசனையும் போட்டிருக்கிறார் நமீதா. என்னவெனில் இனிமே க்ளாமராக நடிக்க மாட்டேன். பெண்களை மையப்படுத்தி அமையும் கதைக்கு முக்கியத்துவம் கொடுத்து வரும் படங்களில்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார். அனுஷ்கா ஷெட்டி போன்ற நடிகைகள் எப்பேற்பட்ட கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகின்றனர்? அவர்களைப் போல் நானும் அப்படிப்பட்ட கேரக்டரில்தான் நடிப்பேன் என்று கூறியிருக்கிறார்.

ஒரு காலத்தில் க்ளாமருக்கு பஞ்சமில்லாமல் கவர்ச்சியை காட்டி வந்த நமீதா இனிமே க்ளாமராக நடிக்க மாட்டேன் என்று கூறியது ஆச்சரியமாக இருக்கிறது. அதுமட்டுமில்லாமல் பொது இடங்களுக்கு வரும் போது சேலையில்தான் பெரும்பாலும் வருகிறார். சில நேரங்களில் பேண்ட் சர்ட் அணிந்து கொண்டு கவர்ச்சியை காட்டாமல் வருகிறார். ஆனால் டாப் ஹீரோயின்களாக இருந்த ஜோதிகா, கீர்த்தி சுரேஷ் போன்ற பல நடிகைகள் பொது இடங்களுக்கு வரும் போது சமீபகாலமாக கவர்ச்சிகளை காட்டி வருவது வருத்தமளிக்கிறது.

Next Story