Categories: tamil cinema gossips

வெள்ளத்தோல் நாயகிகளை மட்டுமே ஓகே செய்யும் நடிகர்கள்… வெளுத்து வாங்கும் பிரபலம்

சினிமாக்களில் பெரும்பாலும் நாயகிகளை அழகு என அளவிடும் அளவுகோலில் முதல் தரம் வெள்ளையாக இருக்க வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமாக மாறி இருக்கிறது. இது இப்போது மட்டுமல்ல பல வருடங்களாக இதே பிரச்சனையை தான் சினிமா வட்டாரத்தில் நிலவுவதாக சினிமா விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்திருக்கிறார்.

ஏவிஎம் நிறுவனத்தில் எம்ஜிஆர், சிவாஜி, ரஜினிகாந்த், கமல்ஹாசன் உள்ளிட்டோரை வைத்து படத்தினை தயாரித்து வெற்றிக்கண்டவர்கள். ஏவிஎம் குமரன் ஒரு பேட்டியில் எங்களிடம் கதை வந்த பின்னர் நான், அப்புச்சி, ஏவிஎம் சரவணன் எல்லோரும் அமர்ந்து அந்தக் கதையில் எந்த நாயகரின் நடிக்க வைக்கலாம்.

எந்த ஹீரோயினை போட்டால் படம் நன்றாக ஓடும் என்பதை தீர ஆராய்ந்து பின்னர் தான் படக்குழுவை முடிவு செய்வோம். அதனால் நாங்கள் முடிவு செய்த பட்ஜெட்டில் படத்தை தயாரிக்க முடிந்தது. ஆனால் தற்போது அதெல்லாம் சாதகமாக இல்லை. ஏனெனில் ஒரு நடிகரை தேர்வு செய்து விட்டால், அவர்தான் யாரை நாயகியாக போட வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும் என நினைக்கின்றனர்,

அப்போ காசு போட்டு படம் எடுப்பவர்கள் அதை பார்த்துக் கொண்டிருக்க வேண்டும். அது மட்டுமல்லாமல் நாயகி சாதாரணமாக இருக்கக் கூடாது. நல்ல வெள்ளை தோலில் மினுமினுப்பாக இருக்க வேண்டும் என நினைக்கின்றனர். தென் மாநிலங்களில் பொதுநிறத்தில் தான் நடிகைகள் கிடைப்பார்கள்.

இதனால் வெள்ளை தோல் நாயகியே தேர்ந்தெடுத்து மும்பையில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டியதாக இருக்கிறது. அவர்களுக்கு தமிழ் வருவதில்லை. அந்த கேரக்டரும் புரியாமல் அவர்களும் தடுமாறுகின்றனர். மும்பையில் இருந்து இறக்கினால் அவர்கள் கேட்க வேண்டிய சம்பளத்தினை கொடுக்க வேண்டிய நிலை வந்துவிட்டது. இந்த காரணத்தால் ஜெமினி படம் மிகப்பெரிய தோல்வியை சந்தித்தாக கூறியதாக பயில்வான் குறிப்பிட்டு இருக்கிறார்.

Published by
ராம் சுதன்