ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள படம் அமரன். முதன்முறையாக கமலுடன் இணைந்து கைகோர்த்துள்ளார் சிவகார்த்திகேயன். ஜி.வி.பிரகாஷ்குமார் இசை அமைத்துள்ளார்.
இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றி பிரபல வலைப்பேச்சாளர் அந்தனன் என்ன சொல்றாருன்னு பார்ப்போமா…
அமரன் படத்துக்கு முதல் தடவையாக புரொமஷனுக்கு அமெரிக்காவுக்குப் போறாங்க. அங்கே தான் கமல் சாரும் இருக்காரு. நிச்சயமா படத்துக்கு பெரிய புரொமோஷன் கொடுப்பாங்க.
கதைக்காக ரசிக்கிற கூட்டம் வந்துடுச்சு. இந்தப் படத்துக்கு ரொம்ப நெகிழ்வான கதையைக் கொடுத்திருக்காரு. சிவகார்த்திகேயனோட பிசினஸையும் தாண்டி இந்தப் படத்துக்கு பெரிய செலவு பண்ணிருக்காங்க. கிட்டத்தட்ட 120 கோடி வரை செலவு
பண்ணிருக்காங்க. சாய்பல்லவியோட கேரக்டர் ரொம்ப மேட்ச்சா இருக்கு. சிவகார்த்திகேயனின் படத்தோட வழக்கமான சாயல்ல இந்தப் படம் இருக்காது. முழுக்க முழுக்க சீரியஸான சிவகார்த்திகேயனைத் தான் பார்க்கப் போறாங்க.
அது தவிர காதலும் படத்துல வருது. ‘யுஏ’ மாதிரி தான் சான்றிதழ் கொடுத்ததா சொன்னாங்க. இந்த நிறுவனம் பயங்கர நம்பிக்கையோட இருக்காங்க. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
சிவகார்த்திகேயனின் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன் படங்கள் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தது. கடைசியாக நடித்த சில படங்கள் சொதப்பி விட்டன.
அதிலும் சிவகார்த்திகேயனே பிரின்ஸ் படத்தில் நடித்தது நான் செய்த பெரிய தவறு. அது வேறொரு நடிகர் நடித்திருக்க வேண்டிய படம்னு சொல்லி வருத்தப்பட்டார். இப்போது விஜய் உடன் கோட் படத்தில் சிறப்புத் தோற்றத்தில் வந்து ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றார்.
கமலுடன் கைகேகார்த்துள்ள படம் என்பதாலும் இதுல வித்தியாசமான சிவகார்த்திகேயனை நம்மால் பார்க்க முடியும் என்பதாலும் படத்திற்கு எக்கச்சக்க எதிர்பார்ப்புகள் வந்துள்ளன. வரும் தீபாவளி அன்று படம் திரைக்கு வருகிறது. ஆடியோ லாஞ்ச் புரொமோஷனுக்கு அடுத்தபடியாக அடுத்தடுத்த புரொமோஷன்களில் படக்குழு தீவிரமாக ஈடுபட்டு வருகிறது.
தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…
தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…
லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…
சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…
Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…
Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…