Categories: latest news

வேட்டையன் படத்தில் ரஜினியின் சம்பளம் இவ்வளவுதானா?!.. நம்பவே முடியலயே!…

Vettaiyan: லைக்கா நிறுவனம் தயாரிப்பில் ஜெய்பீம் பட இயக்குனர் இயக்கியுள்ள வேட்டையன் படத்தில் ரஜினி நடித்திருக்கிறார். இந்த படம் இன்று இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் என்கவுண்டர் மட்டுமில்லாமல் கல்வி மஃபியா, நீட் கல்வி பற்றியும் பேசியிருக்கிறார்கள்.

இந்த படத்தில் ரஜினியின் நீண்ட கால நண்பர் அமிதாப்பச்சன் ஒரு முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். அதோடு, துஷரா விஜயன், பஹத் பாசில், ரித்திகா சிங் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள். இந்த படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. இந்த படத்திற்கு நேர்மறையான விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது.

வழக்கமாக ரஜினி படங்களில் மாஸ் காட்சிகள் இருக்கும். ஆனால், இந்த படத்தில் தேவைப்படும் காட்சிகளில் ரஜினியை மாஸாக காட்டியிருக்கிறார்கள். அதோடு, ரஜினி இதுவரை இது போன்ற வேடத்தில் நடித்ததில்லை என்பதால் ரஜினி ரசிகர்களுக்கு இது வித்தியாசமான அனுபவமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

பல வருடங்களாக சூப்பர்ஸ்டாராக இருந்தாலும் ரஜினி தனது மார்க்கெட்டுக்கு ஏற்ற சம்பளத்தை மட்டுமே வாங்குவார் என்பது பலருக்கும் தெரியாது. அண்ணாத்த படத்தில் 110 கோடி வாங்கினார ரஜினி. ஆனால், அந்த படம் சன் பிக்சர்ஸ் நிறுவனத்துக்கு பெரிய லாபத்தை கொடுக்கவில்லை.

எனவே, அதே சன்பிக்சர்ஸ் நிறுவனத்திடம் 80 கோடி மட்டுமே வாங்கிக்கொண்டு ஜெயிலர் படத்தில் நடித்தார் ரஜினி. ஜெயிலர் படம் சூப்பர் ஹிட் அடித்ததால் அன்பளிப்பு என்கிற பெயரில் 30 கோடியை செக்காக கொடுத்தார் கலாநிதி மாறன். லைக்கா தயாரிப்பில் ரஜினி நடித்த தர்பார் படம் லாபத்தை பெறவில்லை. மேலும், லைக்காவுக்கு ரஜினி மகள் ஐஸ்வர்யா இயக்கிய லால் சலாம் படம் ஓடவில்லை.

அந்த 2 படங்கள் நஷ்டமானதால்தான் மீண்டும் லைக்காவுக்கு கால்ஷீட் கொடுத்த ரஜினி வேட்டையன் படத்தில் நடித்து கொடுத்தார். இந்த படத்திற்கு ரஜினி 250 கோடிக்கும் மேல் சம்பளம் வாங்கினார் என சிலர் கிளப்பிவிட்டார்கள். ஆனால், அதில் உண்மையில்லை என்கிறார்கள் விபரம் அறிந்தவர்கள்.

ரஜினி 80 கோடியை மட்டுமே சம்பளமும் சில ஏரியா உரிமைகளையும் வாங்கி கொண்டார் எனவும் சிலர் சொல்கிறார்கள். ரஜினி கடந்த பல வருடங்களாகவே சம்பளம் வாங்கிக்கொண்டு நடிப்பதில்லை. படம் ரிலீஸாகி வியாபாரம் ஆன பின்னரே தனது சம்பளத்தை வாங்கி கொள்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

ராம் சுதன்

Recent Posts

எம்ஆர்.ராதா நடிகவேள் ஆன கதை… அப்பவே அப்படி ஒரு நடிப்பா?!

நாடக உலகில் எப்படிப்பட்ட சாதனையாளர் எம்ஆர்.ராதா என்பது எல்லோரும் அறிந்த விஷயம். எந்த ஒரு நடிகராக இருந்தாலும் படிப்படியாகத் தானே…

8 hours ago

நான் நன்றாக தமிழ் பேச காரணமே சீமான்தான் – எல்ஐகே நாயகி கீர்த்தி ஷெட்டி நெகிழ்ச்சி

விக்னேஷ் சிவன் இயக்கத்தில் பிரதீப் ரங்க நாதன் நடித்து வருகிற 10ம் தேதி வெளியாகும் படம் எல்ஐகே. தொடர்ந்து ஹாட்ரிக்ல்…

9 hours ago

சிறகடிக்க ஆசை தொடரில் இருந்து வெளியேறுகிறாரா மீனா? வரும் வாரம் நடக்க இருப்பது என்ன?

Siragadikka Aasai: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை தொடரில் இந்த வாரம் நடக்க இருக்கும் எபிசோட் குறித்த…

14 hours ago

என்னது அனிதா சம்பத் டாக்டர் ஆகிட்டாங்களா? இது எப்போ நடந்துச்சு!!

Anitha Sampath: செய்தி வாசிப்பாளராக இருந்த அனிதா சம்பத் தற்போது சோஷியல் மீடியாவில் ஆக்டிவாக இருந்து வருகிறார். இவர் தற்போது…

16 hours ago

திமுக மீது அப்படி என்ன கோபம்? ஒருவரை ஒப்பிட்டுக் கேட்பது மட்டுமே தகுதியா? – விஜய்க்கு இயக்குநர் சேரன் சரமாரி கேள்வி!

தமிழக அரசியல் களம் தற்போது பரபரபான கட்டத்தை எட்டியுள்ளது. தேர்தல் நெருங்கி வருவதால் அரசியல கட்சிகள் பரப்புரையில் பிஸியாக இருந்து…

17 hours ago

Cook with comali 7: ஆடம்பரமாக தொடங்கிய முதல் எபிசோட்… இந்த முறை என்ன ஸ்பெஷல்… போட்டியாளர்கள் இவர்கள் தானா?

Cook with comali 7: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாக இருக்கும் குக் வித் கோமாளி சீசன் 7 நிகழ்ச்சியின் முதல்…

19 hours ago