Categories: Cinema News latest news

எனக்கு அந்த மொழியே பிடிக்காது… தக் லைஃப் டைட்டில் எப்படி உருவானது.. கமல் சொன்ன சூப்பர் நியூஸ்!

Thuglife: கமல்ஹாசன் நடிப்பில் உருவாகி வரும் தக் லைஃப் திரைப்படத்தின் டைட்டில் உருவானது குறித்த ஆச்சரிஅ அப்டேட்டை கமல்ஹாசன் தெரிவித்து இருக்கிறார்.

ரங்கராய சக்திவேல் என்ற பெயரில் கமல்ஹாசனின் தக் லைஃப் படத்தின் டைட்டில் அறிவிக்கப்பட்டது. மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்து வருகின்றனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து வரும் இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா சமீபத்தில் நடந்து வைரலாகி வருகிறது. எல்லா பாடல்களுக்குமே பெரிய அளவில் வரவேற்பு கிடைத்துள்ளது. சின்மயி குரலில் முத்தமழையின் தமிழ் வெர்ஷன் பெரிய பாராட்டுகளுடன் வைரலாகி வருகிறது.

இப்படத்தில் அமர் என்ற கேரக்டருக்கு தான் முக்கியத்துவம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. ஆனால் அந்த கேரக்டரில் யார் நடிப்பார் என்ற எதிர்பார்ப்பு தான் அதிகரித்து இருக்கிறது. மேலும், கமல் அல்லது சிலம்பரசனே நடிக்கலாம் எனவும் கிசுகிசுக்கப்படுகிறது.

இதன்படி படம் வரும் ஜூன் 5ந் தேதி பிரம்மாண்டமாக வெளியாக இருக்கிறது. பல மொழிகளில் வெளியாகும் இப்படத்தின் புரோமோஷனுக்கு படக்குழு மும்முரமாக பல மாநிலங்களுக்கு பறந்து வருகின்றனர். நேற்று நடந்த விழாவில் கன்னடா தமிழில் இருந்து பிறந்ததாக கமல்ஹாசன் பேசி இருப்பார்.

இது தற்போது பலரும் கண்டனம் தெரிவித்து கமலுக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் தக் லைஃப் படத்தின் டைட்டில் எப்படி உருவானது என்ற கேள்வி எழுந்துள்ளது. அதுகுறித்து பேசிய கமல்ஹாசன், ‘சம்பவாமி யுகே யுகே’ என்று தலைப்பை தான் முதலில் கூறினேன்.

அது கிருஷ்ணர் சொன்னது. ‘மீண்டும் மீண்டும் அவதரிப்பேன்’ என்று அதன் அர்த்தம். இந்தக் கதைக்கு பொருந்தக்கூடிய தலைப்பாகவும் இருந்தது. ஆனால் வடமொழி மேல் எங்கள் இருவருக்கும் பெரிய மரியாதை இல்லை. அது வெறும் உபயோக கருவி தான்.

புரியவும் புரியாது. இப்படி ஒவ்வொரு முறையும் மணிரத்னத்திடம் டைட்டில் சொல்லிக்கொண்டே இருந்தேன். அப்பொழுது சொன்ன டைட்டில் தான் தக் லைஃப் எனவும் குறிப்பிட்டு இருக்கிறார். இருந்தும் இப்படத்தின் டைட்டில் அறிவிப்பிலே இந்த கூட்டணி வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

Published by
ராம் சுதன்