சைதன்யாவை ஸ்பை பண்ணாததால் மொத்தமா போச்சு…. ஷாக் கொடுத்த சமந்தா!...

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:34:25  )

Samantha: கோலிவுட் நடிகை சமந்தா தான் ஸ்பை செய்ய வேண்டிய நேரத்தில் செய்யாமல் விட்டது தான் எல்லாம் தவறாகப் போனதாக சொல்லியிருப்பது ரசிகர்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

தமிழ் சினிமாவில் பானா காத்தாடி திரைப்படத்தின் மூலம் ரசிகர்களிடம் புகழ்பெற்றவர் நடிகை சமந்தா. தொடர்ச்சியாக அவருக்கு வாய்ப்புகள் குவிந்தது. தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து வந்தார்.

அவருக்கு தெலுங்கு விண்ணைத்தாண்டி வருவாயா படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்த நிலையில் அப்படம் அவருக்கு மிகப்பெரிய வரவேற்பை பெற்றுக் கொடுத்தது. தொடர்ச்சியாக தன்னுடைய கவனத்தை தெலுங்கிலும் வைத்திருந்தார் நடிகை சமந்தா.

நடித்துக் கொண்டிருக்கும் போதே அங்கு பிரபலமாக இருந்த நாக சைதன்யா மீது காதல் பிறந்தது. இருவரும் சில நாட்கள் டேட்டிங் சென்ற பின்னர் வீட்டார் சமத்துடன் இரு மதம் முறைப்படி பிரமாண்டமாக திருமணம் செய்து கொண்டனர்.

பொதுவாக நடிகைகள் திருமணம் முடித்தவுடன் நடிப்பை கைவிட்டு விடுவார்கள். ஆனால் சமந்தா தொடர்ச்சியாக நடித்து வந்தார். அதுமட்டுமல்லாமல் திருமணத்திற்கு பின்னர் புஷ்பா திரைப்படத்தில் அவர் ஆடிய ஒற்றை பாடலும் குடும்பத்தில் பிரச்சனையை உருவாக்கியதாக கூறப்பட்டது.

ஆனால் சமந்தாவுடன் வாழ்ந்து கொண்டிருக்கும்போதே சைதன்யா சுபிதா இருவருக்கும் உறவு இருந்ததாக கிசு கிசுக்கப்பட்டது. இந்நிலையில் தான் இருவரும் நான்கு வருட திருமண வாழ்க்கையை அதிகாரப்பூர்வமாக முறித்துக் கொண்டனர்.

சைதன்யா தற்போது சோபிதா வரும் டிசம்பர் மாதத்தில் திருமணம் செய்து கொள்ள இருக்கிறார். இந்நிலையில் ஒரு பேட்டியில் கலந்து கொண்ட நடிகை சமந்தாவிடம் ஹனிபி திரைப்படத்தில் நீங்கள் ஸ்பையாக நடித்திருக்கிறீர்கள்? நிஜ வாழ்க்கையிலும் அது போல் செயல்பட்டு இருக்கிறீர்களா என கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு சமந்தா, ஸ்பையாக இருக்க வேண்டிய சூழல் என் வாழ்க்கையில் வந்தது. ஆனால் நான் அப்படியில்லாமல் போனதுதான் தவறானதாகவும் குறிப்பிட்டு இருக்கிறார். இதனால் சமந்தாவின் விவாகரத்தில் வேறு ஏதோ பிரச்சனை இருப்பதாகவும் ரசிகர்களுக்கு கிசுகிசுத்து வருகின்றனர்.

Next Story