அர்ஜூன் ரெட்டி படத்தில் முதலில் நடிக்க இருந்தது சாய் பல்லவியா? ஆனா நடந்ததே வேற சம்பவம்!

by ராம் சுதன் |

Arjun Reddy: பேன் இந்திய வெற்றி படமான அர்ஜூன் ரெட்டி படத்தில் முதலில் சாய் பல்லவியை நடிக்க வைக்க டைரக்டர் ஆசைப்பட அதற்கு அவருக்கு நடந்த சம்பவம் குறித்து தெரிவித்து இருக்கிறார்.

தெலுங்கில் விஜய் தேவரக்கொண்டா மற்றும் ஷாலினி பாண்டே நடிப்பில் வெளியான அர்ஜூன் ரெட்டி படத்தினை சந்தீப் ரெட்டி வாங்கா இயக்கினார். பிசியோதெரபி மாணவராக இருந்த சந்தீப் ரெட்டி வாழ்க்கை கதையை மையமாக வைத்தே இப்படம் உருவாக்கப்பட்டு இருந்தது.

இப்படத்தின் ஸ்கிரிப்ட் வேலைகளை இரண்டு வருடம் செய்த சந்திப்பட்டி படத்தை எடுத்து முடிக்க 4 முதல் 5 வருடம் ஆக்கினார். 5 கோடி பட்ஜெட்டில் இயக்கப்பட்டு வெளியான இத்திரைப்படம் எல்லா மொழிகளிலும் நல்ல வரவேற்ப்பை பெற்றது. 51 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது.

இப்படம் 18 வயதிற்கு மேற்பட்டோருக்கான படம் என்றாலும் பலரிடமும் லைக்ஸ் குவித்தது. இதை தொடர்ந்து தமிழில், இந்தியில் இப்படம் மற்றொரு நடிகர்களை வைத்து அதிகாரப்பூர்வமாக ரீமேக் செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சந்தீப் ரெட்டி இயக்கும் எல்லா படங்களும் வித்தியாசமானதாக அமைந்துள்ளது.

ஆனால் முதலில் சந்தீப் ரெட்டி, அர்ஜூன் ரெட்டி படத்துக்கான ப்ரீத்தி ஷெட்டி கேரக்டரில் நடிக்க வைக்க சாய்பல்லவியை தான் முதலில் நாடி இருக்கிறார். அப்பொழுது அவருக்கு மேனேஜர் ஒருவரின் நம்பர் கிடைத்திருக்கிறது. அவரிடம் என்னிடம் ஒரு கதை இருக்கிறது அதில் சாய்பல்லவி நடித்தால் நன்றாக இருக்கும் என எதிர்பார்ப்பதாக கூறி இருக்கிறார்.

அப்பொழுது பதில் பேசிய அந்த மேனேஜர் சேர அதை மறந்து விடுங்கள். அந்த நடிகை ஸ்லீவ்லெஸ் போட்டு நடிக்க சொன்னாலே நடிக்க மாட்டார். இந்த படத்தில் அவர் நடிப்பது சாத்தியமே இல்லை எனக் கூறி மறுத்திருக்கிறார். இதை சமீபத்தில் நடந்த தண்டில் பட விழாவில் சந்தீப் ரெட்டி தெரிவித்து இருக்கிறார்.

மேலும் அவர் பொதுவாக நடிகைகள் வாய்ப்பு வந்த பின்னர் மாறிவிடுவார்கள். அதற்கேற்ப கேட்பதை செய்வார்கள். ஆனால் சாய் பல்லவி இன்னும் அப்படியே இருக்கிறார். நீங்க கிரேட் எனவும் தெரிவித்து உள்ளார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Next Story