Categories: latest news

சொன்னது சொன்னபடி சரியா நடக்கும்!.. இட்லி கடை படத்தின் ரிலீஸ்.. வெளியான அப்டேட்!..

தமிழ் சினிமாவில் தற்போது மிகவும் பிசியான நடிகராக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். தமிழ் மொழி மட்டுமில்லாமல் தெலுங்கு, ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் பல இயக்குனருடன் திரைப்படங்களை கமிட் செய்து பிஸியாக நடித்து வருகின்றார். ராயன் திரைப்படத்திற்கு பிறகு இவரின் எந்த திரைப்படமும் வெளியாகவில்லை என்றாலும் அடுத்தடுத்து ரிலீசுக்கு லயன் கட்டி நிற்கின்றது படங்கள்.

இந்த வருடம் மட்டும் மாதம் ஒரு படம் வீதம் ரிலீஸ்-ஆக இருக்கின்றது. அந்த வகையில் பிப்ரவரி 21ஆம் தேதி நடிகர் தனுஷ் இயக்கி தயாரித்திருக்கும் நிலவுக்கு என்னடி என்மேல் கோபம் என்கின்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. அதனை தொடர்ந்து ஏப்ரல் 10ம் தேதி தமிழ் புத்தாண்டை முன்னிட்டு இட்லி கடை திரைப்படம் ரிலீஸ் ஆக இருக்கின்றது.

இயக்குனர் சேகர் கமுலா இயக்கத்தில் உருவாக்கி இருக்கும் குபேரா திரைப்படம் ஜூன் அல்லது ஜூலை மாதம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது. பின்னர் செப்டம்பர் மாதம் ஹிந்தியில் ஆனந்த் எல் ராய் இயக்கத்தில் உருவாகி வரும் தேரே இஷ்க் மெயின் திரைப்படம் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

இப்படங்கள் அனைத்துமே அதிகாரப்பூர்வமாக வெளியாகும் என அறிவிக்கப்பட்ட தேதிகள் ஆகும். இப்படி தொடர்ந்து அடுத்தடுத்த திரைப்படங்கள் ரிலீசுக்கு தயாராக இருக்கின்றது. இது இல்லாமல் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் ஒரு திரைப்படத்தில் கமிட்டாகி இருக்கின்றார். அதனை முடித்து லப்பர் பந்து திரைப்படத்தை இயக்கிய தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் ஒரு திரைப்படமும் தெலுங்கு இயக்குனர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடிப்பதற்கு கமிட்டாகி இருப்பதாக கூறப்படுகிறது.

இது இல்லாமல் ஏற்கனவே தொடங்கப்பட்ட இளையராஜாவின் பயோபிக் திரைப்படமும் அப்படியே நின்று கொண்டிருக்கின்றது. இப்படி நிற்கக்கூட நேரமில்லாமல் படு பிசியாக இருந்து வருகின்றார் நடிகர் தனுஷ். இதற்கிடையில் சமீபத்தில் நடிகர் தனுஷ் நடித்து இயக்கி இருக்கும் இட்லி கடை திரைப்படம் ஏப்ரல் 10ம் தேதி ரிலீஸ் ஆகாது. படத்தின் படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை.

படத்தை முடிப்பதற்கு இன்னும் சிறிது நாட்கள் தேவை என்பதால் படம் சொன்ன தேதியில் வெளியாகாது என்கின்ற தகவல் பரவி வந்தது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக ஏப்ரல் 10ம் தேதி படம் நிச்சயம் வெளியாகும் என்று கோலிவுட் வட்டாரங்களில் கூறி வருகிறார்கள்.

ஏனென்றால் படத்தின் படப்பிடிப்பு ஏறத்தாழ முடிவடைந்து விட்டதாகவும், இன்னும் 10 நாட்களில் ஷூட்டிங் முழுவதும் முடிவடைய இருப்பதாக கூறப்படுகின்றது. அதனை தொடர்ந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் முடிவடைந்து படத்தின் ரிலீஸ் சொன்ன தேதியில் வெளியாகும் என்று கூறப்படுகின்றது.

ramya suresh

Recent Posts

மீண்டும் மிரட்ட வரும் அருள்நிதி: முடிவடைந்த டிமான்ட்டி காலனி 3 படப்பிடிப்பு!

தமிழ் சினிமாவில் ஹாரர் திரைப்படங்களுக்கு எப்போதுமே தனி ரசிகர் பட்டாளம் உண்டு. அந்த வகையில், பேய்ப் பட ரசிகர்களை சீட்…

5 hours ago

தனுஷின் கர-வை தொடர்ந்து பரீட் – பாடகராக பிஸியாகும் அருண் காமராஜ்

தனுஷின் 'கர' படத்தைத் தொடர்ந்து, '8 தோட்டாக்கள்' புகழ் நடிகர் வெற்றி நடிக்கும் பரீட் படத்திற்காக, அதிரடியான ஒரு போலீஸ்…

5 hours ago

நாளை வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் எல்ஐகே டிரைலர் !

லவ் டுடே, டிராகன், ட்யூட் வெற்றி படங்களை தொடர்ந்து அடுத்து பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் எல்ஐகே வருகிற 10ம் தேதி…

6 hours ago

சிம்புவுடன் பஞ்சாயத்து!.. அரசன் படத்தை நிறுத்திய ஐசரி கணேஷ்.. முடிஞ்ச்!..

சிம்பு என்றாலே பஞ்சாயத்துதான். ஏனெனில், சிம்பு ஒரு படத்தில் நடிக்கிறார் என்றால் ஒன்று அவர் மூலம் அந்த படத்துக்கு பிரச்சனை…

7 hours ago

சன் டிவி சீரியல்களுக்கு டஃப் கொடுக்கும் விஜய் சீரியல்கள்… இந்த வார டிஆர்பியில் இதை நோட் செஞ்சீங்களா?

Serial TRP: தமிழ் சின்னத்திரையில் வெளியாகும் சீரியல்களுக்கான இந்த வார டிஆர்பி அப்டேட் வெளியாகி இருக்கிறது. அந்த வகையில் சன்…

13 hours ago

கோலிவுட் டூ சின்னத்திரை!… பாண்டியன் ஸ்டோர்ஸ்2 சீரியலில் இனி சிலம்பரசன்?

Pandian Stores2: விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ்2 தொடரில் நடிகர் சிலம்பரசனும் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி…

14 hours ago