இந்த படம் ஓடாது!.. விலைபோகாத விஜயகாந்த் படம்!.. இசையால் ஓட வைத்த இளையராஜா!...

by ராம் சுதன் |

vijayakanth: 80களில் தமிழ் சினிமாவை காப்பாற்றும் கடவுளாக இருந்தவர் இளையராஜா. அவரின் இசையயை நம்பியே அப்போது திரைப்படங்கள் உருவானது. தனது இனிமையான இசையால் பல மொக்கை படங்களையும் ஒட வைத்தார். ரஜினி, கமல் போன்ற பெரிய நடிகர்களே தங்கள் படங்களின் வெற்றிக்கு இளையராஜாவை நம்பி இருந்தனர்.

விஜயகாந்தும், ராவுத்தரும் சேர்ந்து இயக்குனர் செந்தில் நாதனுக்காக பூந்தோட்ட காவல்காரன் படத்தை உருவாக்கினார்கள். ஆனால், புது இயக்குனர் என்பதால் படத்தை வாங்க வினியோகஸ்தர்கள் ஆர்வம் காட்டவில்லை. திருச்சி வினியோகஸ்தர் அடைக்கலராஜ் மட்டும் ராவுத்தரிடம் அட்வான்ஸ் கொடுத்தார். படம் முடிந்து பின்னணி இசைக்காக இளையராஜாவிடம் சென்றது.

இளையராஜாவுடன் இயக்குனர் கோகுல கிருஷ்ணாவும் படத்தை பார்த்தார். இருவருக்கும் படம் பிடிக்கவில்லை. அதோடு, படம் நன்றாகஇல்லை. இப்படத்தை வினியோகம் செய்தால் உனக்கு நஷ்டம்தான் என கோகுல கிருஷ்ணா அடைக்கலராஜிடம் சொல்ல அவர் ராவுத்தரிடம் சென்று கொடுத்த அட்வான்ஸை திருப்பி வாங்கினார்.

இந்த விஷயம் சினிமா உலகில் பரவியது. இந்த படத்தை ரிலீஸ் செய்ய வேண்டாம் என ராவுத்தரும், விஜயகாந்துமே முடிவு செய்துவிட்டனர். தனது இயக்கத்தின் மீது செந்தில் நாதனுக்கே சந்தேகம் வந்தது. இளையராஜாவிடம் சென்ற விஜயகாந்த் ‘ஏன் கண்ட கண்ட ஆட்களையும் வைத்துக்கொண்டு படம் பார்க்கிறீர்கள். இந்த படத்திற்கு ரீ ரிக்கார்டிங் வேண்டாம்’ என சண்டை போட்டுவிட்டு போய்விட்டார். படம் கிடப்பில் போடப்பட்டது.

விஜயகாந்தும், ராவுத்தரும் திட்டுவார்கள் என்பதால் அவர்களை போய் செந்தில்நாதன் பார்க்கவே இல்லை. அதோடு, தனது குருநாதர் எஸ்.ஏ.சந்திரசேகரிடம் மீண்டும் உதவியாளராக சேர்ந்துவிட்டார். ஒருநாள் படத்தின் பிரிண்ட்டை எடுத்து வர சொன்ன ராஜா படத்திற்கு பின்னணி இசை அமைக்கிறார். ஆனால், விஜயகாந்துக்கும், ராவுத்தாருக்கும் அதை பார்க்கும் ஆர்வம் கூட வரவில்லை.

படம் வினியோகஸ்தர்களுக்கு திரையிட்டு காண்பிக்கப்பட்டது. செந்தில் நாதன் மட்டும் சென்றிருந்தார். படம் முடிந்ததும் ‘எங்கே செந்தில் நாதன்?’ என எல்லோரும் கேட்க, கூனி குறுகி வருகிறார் செந்தில் நாதன். ‘படம் சூப்பர்.. பின்னிட்டயா’ என சொல்லி படத்தை வாங்க எல்லோரும் போட்டி போடுகிறார்கள். விஜயகாந்தும், ராவுத்தருமே ஆச்சர்யப்பட்டனர்.

படத்தை பார்த்த விஜயகாந்த் செந்தில்நாதனை கட்டிப்பிடித்து பாராட்டி ஒரு கார் ஒன்றை வாங்கி கொடுத்து ‘தமிழ்நாடு முழுவதும் சென்று படத்திற்கு வரவேற்பு எப்படி இருக்கிறது என பார்த்து விட்டு வா’ என சொல்லி அனுப்புகிறார். இப்படி பூந்தோட்ட காவல்காரன் படத்தை தனது இசையால் ஓட வைத்தார் இளையராஜா. அதன்பின் செந்தில் நாதனும் பல படங்களை இயக்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story