என்கிட்ட வேலை வாங்க இங்க ஒருத்தனும் இல்ல!. அது தப்பு கணக்கு!.. போட்டு தாக்கும் இளையராஜா!...

by ராம் சுதன் |

Ilayaraja: அன்னக்கிளி திரைப்படம் மூலம் தமிழ் சினிமாவில் இசையமைக்க துவங்கியவர் இளையராஜா. அந்த படத்தின் பாடல்கள் பட்டிதொட்டியெங்கும் பிரபலமானது. இளையராஜாவின் மண் வாசனையோடு வெளிவந்த கிராமத்திய இசை ரசிகர்களை கட்டிப்போட்டது. ஹிந்தி பாடல்களை கேட்டு ரசித்துக்கொண்டிருந்த ரசிகர்கள் ராஜாவின் பாட்டுக்கு மயங்கினார்கள்.

திரைப்படங்களின் வெற்றிக்கு இளையராஜா தேவைப்பட்டார். 80களில் முன்னணியில் இருந்த இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் மற்றும் நடிகர்கள் என எல்லோரும் இளையராஜாவை மட்டுமே நம்பி இருந்தனர். தங்களின் படங்கள் வெற்றி பெற வேண்டுமெனில் ராஜாவின் இசை முக்கியம் என அவர்கள் நினைக்கும்படி இருந்தது ராஜாவின் பாடல்கள்.

பல இனிமையான, அற்புதமான, மனதை மயக்கம், காலத்திற்கும் மாறாத பாடல்களை கொடுத்திருக்கிறார் இளையராஜா. இப்போதும் இளம் இசையமைப்பாளர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். இன்னும் சொல்லப்போனால் அவரின் மகன் யுவன் சங்கர் ராஜா கூட ஹிட் பாடல்கள கொடுப்பதில்லை. ஆனால், ராஜா கொடுக்கிறார்.

இப்போதும் அவரின் பாடல்களை ரசிகர்கள் ரசிக்கிறார்கள். இப்போதும் ராஜா இசைக்கச்சேரிகளை நடத்துகிறார். வெளிநாடுகளுக்கு போய் சிம்பொனி அமைக்கிறார். அவரின் ‘கண்மணி அன்போடு காதலன்’ என்கிற ஒரு பாடலை வைத்து மஞ்சுமெல் பாய்ஸ் பட தயாரிப்பாளர்கள் 200 கோடிக்கும் மேல் வசூலை அள்ளினார்கள்.

ஆனால், நான் எதையும் சாதிக்கவில்லை. நான் இன்னும் இசையை கற்றுக்கொள்ளவில்லை. அதனால்தான் தொடர்ந்து இசையமைத்து வருகிறேன். முழுமையாக கற்றிருந்தால் இசையமைப்பதை நிறுத்தியிருப்பேன் என்கிறார் இளையராஜா. சமீபத்தில் செய்தியாளர்களிடம் பேசிய இளையராஜா ‘நான் சாதித்துவிட்டதாக நீங்கள்தான் நினைக்கிறீர்கள். நான் சொல்லவில்லை. ஒரு இசைக் கலைஞனுக்கு விருது எப்போதும் உற்சாகம் தரக்கூடியதாக இருக்காது. ஏனெனில், அவர்கள் இசை உலகில் வாழ்வார்கள்.

என்னை தேடி நீங்கள் வருகிறீர்கள் என்றால் அது என் மீதுள்ள அன்புதான். இதற்கு பின்னால் பல வருட உழைப்பு இருக்கிறது. என்கிட்ட வேலை வாங்க இங்க ஒருத்தனும் இல்லை. அவர்களுக்கு கிடைத்தல்லெல்லாம் அன்றைக்கு அவர்களின் பசிக்கு கிடைத்த உணவுதான். அதை வைத்து இளையராஜா இவ்வளவுதான் என முடிவு செய்ய முடியாது. என் இசையை உங்களால் வரையறுக்க முடியாது. என்னிடமிருந்து என்ன இசை வரும் என்பதை உங்களால் கணிக்கவே முடியாது’ என பேசினார் இளையராஜா.

மேலோட்டமாக பார்ப்பவர்களுக்கு அவர் ஏதோ திமிறு பிடித்தவர் என நினைத்தாலும் அவரின் சாதனையை கணக்கிட்டு பார்த்தால் அவர் சொல்வதில் உள்ள உண்மை புரிய வரும்.

Next Story