மூக்குத்தி அம்மன் 2வில் வில்லன் அருண்விஜய் இல்லையாம்.. அட இந்த நடிகரா?

இன்று கோலாகலமாக நடைபெற்றது மூக்குத்தி அம்மன் திரைப்படத்தின் பட பூஜை. பிரசாத் ஸ்டுடியோவில் இந்த படத்திற்கான பூஜை நடைபெற்றது. அதற்கு முன்னதாகவே படத்தின் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் திரைப் பிரபலங்கள் பலருக்கும் நேரடியாக சென்று பூஜை அழைப்பிதழை கொடுத்து வரவேற்றார். ரஜினி கமல் இவர்களுக்கும் பூஜைக்கான அழைப்பதிலும் கொடுக்கப்பட்டது. ஆனால் இன்று நடந்த பூஜையில் அவர்கள் இருவருமே கலந்து கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் முதல் பாகம் வெளியாகி மக்களிடையே நல்ல ஒரு வரவேற்பை பெற்றது. அந்த படத்தை ஆர் ஜே பாலாஜி இயக்கி அவரே அதில் நடிக்கவும் செய்தார். நயன்தாராவின் அம்மன் வேடம் அனைவரையும் வெகுவாக ஈர்த்தது. அதுவரை கொடூரமான அம்மனாக ஆக்ரோஷமான அம்மனாக பார்த்து வந்த மக்களுக்கு இந்த படத்தில் ஒரு வித்தியாசமான அம்மனை பார்த்ததொரு உணர்வை ஏற்படுத்தியது .சொல்லப்போனால் ஸ்டைலிஷ் ஆன அம்மன் என்றே சொல்லலாம்.
முதல் பாகத்தின் வெற்றி இரண்டாம் பாகத்தை எடுப்பதற்கும் ஒரு உந்துதலை தந்தது. அதனால் தான் ஐசரி கணேஷ் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்கும் பணியில் தீவிரமாக இறங்கினார். முதல் பாகம் வெளியாகி கிட்டத்தட்ட ஐந்து வருடங்கள் ஆன நிலையில் எந்த ஒரு பக்தி படமும் வரவில்லை .ஏன் அதுவும் ஃபேன் இந்தியா படமாக நாம் ஒரு பக்தி படத்தை எடுக்கலாமே என்ற ஆசையில் தான் ஐசரி கணேஷ் மீண்டும் மூக்குத்தி அம்மன் படத்தின் இரண்டாம் பாகத்தை எடுக்க திட்டமிட்டாராம். அதை சுந்தர் சி இயக்குகிறார் .
நயன்தாராவுடன் இணைந்து அபிநயா ,ரெஜினா, யோகி பாபு போன்ற பல பிரபலங்கள் நடிக்கின்றனர். இதற்கு முன்பாகவே மூக்குத்தி அம்மன் 2 திரைப்படத்தில் நயன்தாராவுக்கு வில்லனாக அருண் விஜய் நடிப்பார் என்ற ஒரு தகவல் வெளியானது. ஆனால் இன்று நடைபெற்ற பூஜையில் அருண் விஜய் காணவில்லை. அதனால் இந்த படத்தில் அருண் விஜய் நடிப்பதற்கு வாய்ப்பு இல்லை என தெரிகிறது. ஏனெனில் இந்த படத்தில் வில்லனாக நடிப்பதற்கு அவர் ஒரு பெரிய தொகையை சம்பளமாக கேட்டதாகவும் ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது .
அதேசமயம் சுந்தர் சி இன்று பேசும்பொழுது இந்த படத்தில் ஒரு நெகட்டிவ் கேரக்டரில் பவர்ஃபுல்லான நடிகரை நடிக்க வைக்க வேண்டும் என தான் எண்ணியதாகவும் அதனால் தனக்கு பிடித்த கன்னட நடிகரான துனியா விஜய் என்பவர் இந்த படத்தில் நடிக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார். அவர் நடிகராக மட்டுமல்ல இயக்குனராகவும் அறியப்படுகிறார். அவர்தான் இந்த படத்தில் நெகட்டிவ் கேரக்டரில் நடிக்கப் போகிறார் என சொல்லப்படுகிறது. அதன் மூலம் துனியா விஜய் முதன் முதலில் தமிழில் அறிமுகமாகும் முதல் திரைப்படமாக இந்த மூக்குத்தி அம்மன் 2 திரைப்படம் இருக்கும் என தெரிகிறது.