சிம்பு ஒரு ஃபார்ம்லதான் இருக்காரு.. STR 49ல் என்ன மாதிரியான ரோல் தெரியுமா?

Published on: August 8, 2025
---Advertisement---

Simbu: சமீபத்தில் தான் சிம்பு நடிக்கும் அவருடைய 49 வது படத்தின் பூஜை நடைபெற்றது. பூஜை நடந்து முடிந்ததிலிருந்து படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என அனைவரும் எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்த படத்தில் சந்தானம் நடிக்க உள்ளார். இது படத்திற்கு கூடுதல் ஹைபை ஏற்படுத்தியிருக்கிறது. ஏனெனில் சில ஆண்டுகளாகவே சந்தானம் ஹீரோவாகவே நடித்து வந்த நிலையில் இனிமேல் காமெடியனாக நடிக்க மாட்டேன் என கூறி வந்தார். ஆனால் இப்போது சிம்புவுடன் மறுபடியும் இவர் இணைந்திருப்பது படத்திற்கு கூடுதல் பலமாக இருக்கும் என சொல்லப்படுகிறது.

ஏற்கனவே சிம்பு சந்தானம் காம்போ ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றிருக்கிறது. சந்தானத்தை சினிமாவில் அறிமுகப்படுத்தியதே சிம்பு தான். மன்மதன் திரைப்படத்தின் மூலம் முதன்முதலில் சந்தானம் காமெடியனாக அறிமுகமானார். அதிலிருந்து தொடர்ந்து காமெடி நடிகராக நடித்து நகைச்சுவையில் தனக்கென ஒரு தனி முத்திரை பதித்தார் சந்தானம்.

இந்த படத்தில் சிம்புவுக்கு ஜோடியாக கையாடு லோகர் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை பார்க்கிங் பட இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்க இருக்கிறார் .இதனை அடுத்து தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிம்புவின் 50ஆவது படம் உருவாகிறது .அதற்கு அடுத்தபடியாக அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் சிம்புவின் 51 வது படம் உருவாக இருக்கிறது .ஜூன் ஐந்தாம் தேதி சிம்பு கமல் கூட்டணியில் தக் லைப் திரைப்படமும் வெளியாக இருக்கிறது.

இப்படி அடுத்தடுத்து அப்டேட்டை வாரி வழங்கும் சிம்பு நேற்று திருச்சியில் நடைபெற்ற ஒரு கல்லூரி விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டியுள்ளார். அங்கு அவருடைய 49 ஆவது படத்தை பற்றிய கேள்விகள் கேட்கப்பட்டது. அதாவது ஒரு கல்லூரி மாணவனாக சிம்பு எப்படிப்பட்டவர் என்ற கேள்விக்கு என்னுடைய 49 ஆவது படத்தில் நான் கல்லூரி மாணவனாக தான் நடிக்க இருக்கிறேன்.

இயக்குனர் இந்த படத்தில் நீங்கள் கல்லூரி மாணவனாக வருகிறீர்கள் என்று சொன்னதும் எனக்கு ஆச்சரியம். நான் பார்ப்பதற்கு கல்லூரி மாணவனாக இருக்கிறேனா என அங்குள்ள மாணவர்களிடம் கேட்டார் சிம்பு. ஏற்கனவே எஸ் டி ஆர் 49 படத்தின் போஸ்டர் வெளியாகும் போது அதில் சிம்பு திரும்பி நின்றுவாறு கையில் ஒரு புத்தகத்தை பிடித்தபடி இருந்தார். அதைப் பார்த்ததும் ஒருவேளை இந்த படத்தில் கல்லூரி பேராசிரியராக வருவாரோ என அனைவரும் கூறி வந்தார்கள்.

simbu

simbu

ஆனால் கல்லூரி மாணவனாக தான் சிம்பு இந்த படத்தில் வர இருக்கிறார். அவர் கல்லூரி மாணவனாக நடித்த படங்கள் அனைத்துமே இளைஞர்களுக்கான படமாக தான் இருந்திருக்கிறது .குறிப்பாக லவ் ரொமான்ஸ் இதற்கு பஞ்சமே இருக்காது .அதனால் ஒரு நீண்ட கேப்புக்கு பிறகு அந்த மாதிரி படத்தில் நடிக்கப் போகிறார் சிம்பு என கூறி வருகிறார்கள்.

ராம் சுதன்

முருகன், சினிரிப்போர்டஸ் தமிழ் இணையதளத்தில் கடந்த 8 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறார். ஊடகத்துறையில் 10 ஆண்டுகளுக்கு மேல் அனுபவம் கொண்டவர். இளங்கலை பட்டதாரியான இவர், வெப்துனியா தமிழ் இணையதளத்தில் 2016 ஆம் ஆண்டு பணியைத் தொடங்கினார். இந்த தளத்தில் சினிமா செய்திகளை வழங்கி வருகிறார். மேலும் இணையதள செய்தி ஆசிரியராகவும் பணியாற்றி வருகிறார்.

Leave a Comment