கங்குவா 2000 கோடியா? உருட்டுறதுக்கு அளவு இல்லையா? சூர்யாவின் மாஸ்ஹிட் படத்தின் வசூலே இவ்வளவுதான்!..

by ராம் சுதன் |   ( Updated:2024-11-07 16:35:09  )

Kanguva: சூர்யாவின் நடிப்பில் உருவாகி வெளியாக இருக்கும் கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என அப்படத்தின் தயாரிப்பாளர் கே.இ. ஞானவேல் ராஜா பேசி இருப்பது வைரலாகி வருகிறது.

2019ம் ஆண்டு அறிவிக்கப்பட்ட திரைப்படம் கங்குவா. இப்படத்தினை ஸ்டுடியோ க்ரீன் மற்றும் யூவி கிரியேஷன் தயாரித்து வருகின்றனர். இப்படத்தினை இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். மதன் கார்க்கி திரைக்கதை எழுதி இருக்கிறார்.

சூர்யா இரட்டை வேடத்தில் நடித்து இருக்கிறார். பாபி தியோல், திஷா பதானி, நட்ராஜன், ஜகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். சூர்யா இப்படத்தில் 13 வேடங்களில் தோன்ற இருக்கிறாராம். இதற்கு முன்னர் அயன் திரைப்படத்தில் 10 வேடம் போட்டு இருந்தார்.

இதன்மூலம் அந்த கணக்கை முறியடித்து இருக்கிறார். இப்படத்தின் மூலம் தான் நடிகை திஷா பதானி மற்றும் பாபி தியோல் தங்களுடைய தமிழ் அறிமுக படத்தில் நடிக்க இருக்கின்றனர். இப்படத்தின் கிளைமேக்ஸில் கார்த்தி ஸ்பெஷல் கேமியோ ரோலில் நடிக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

தற்போது கங்குவா திரைப்படம் நவம்பர் 14ந் தேதி உலகமெங்கும் திரைக்கு வர இருக்கிறது. தமிழகத்தில் சோலோ ரிலீஸ் என்பதால் படத்தின் வசூல் அதிகரிக்கும் எனக் கூறப்படுகிறது. மேலும் வட இந்தியாவிலும் 4000க்கும் அதிகமான திரையரங்கில் வெளியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் கங்குவா திரைப்படம் 2000 கோடி வசூல் செய்யும் என அப்படத்தின் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா பேசி இருக்கிறார். பொதுவாக சூர்யாவிற்கு தமிழ் சினிமாவில் பெரிய மார்க்கெட் என்பதும் இல்லை. அவரின் கேரியரில் மிக அதிகமாக வசூல் செய்ததே 2013ல் வெளியான சிங்கம்2 திரைப்படம் தான். அதன் வசூல் 136 கோடி வரை எனக் கூறப்படுகிறது.

Next Story