எம்ஜிஆருக்கு அப்புறம் கமல்தான்... அந்த விஷயத்துல வேற யாரும் வரமுடியாது..!

by sankaran v |
எம்ஜிஆருக்கு அப்புறம் கமல்தான்... அந்த விஷயத்துல வேற யாரும் வரமுடியாது..!
X

எம்ஜிஆருக்கும், கமலுக்கும் என்ன சம்பந்தம்? அவரது படங்களில் கமல் குழந்தை நட்சத்திரமாகத்தானே நடித்தார். வேறு என்ன செய்து விட்டார் என்றெல்லாம் யோசிக்கத் தோன்றும். எம்ஜிஆரின் பாணியைப் பின்பற்றி நடித்தவர்கள் என்றால் பாக்கியராஜ், சத்யராஜைத் தான் சொல்வார்கள். இருவரும் அவரது தீவிர ரசிகர்கள். ஆனால் இங்கு நேர்மாறாக இருக்கிறதே என்று தோன்றும். ஆனா எம்ஜிஆருக்குப் பிறகு கமல் தான் அந்த விஷயத்துல இருக்காரு. வாங்க என்னன்னு பார்க்கலாம்.

எம்ஜிஆர் படங்கள்: புரட்சித்தலைவர் எம்ஜிஆர் நடித்த படங்கள் என்றாலே அது மக்கள் மத்தியில் எளிதில் வரவேற்பைப் பெற்றுவிடும். அதற்குக் காரணம் அவர் படத்தில் வரும் நல்ல கருத்துகளும், கதை அம்சங்களும், பாடல்களும், காமெடியும், சென்டிமென்டும் என அனைத்து விஷயங்களுமே கனகச்சிதமாக சேர்க்கப்பட்டு இருக்கும்.

சினிமாவில் இவருக்குப் பல விஷயங்களும் அத்துப்படி. அதனால் தான் இவரால் 2 படங்களையும் இயக்க முடிந்தது. நாடோடி மன்னன், உலகம் சுற்றும் வாலிபன் என்ற அந்த இரு படங்களுமே சூப்பர்ஹிட்.

முதல் தமிழ் நடிகர்: அந்தவகையில் தேசிய விருதைப் பெற்ற முதல் தமிழ் நடிகர், நடிகை யாருன்னு ரசிகர் ஒருவர் தயாரிப்பாளர் சித்ரா லட்சுமணனிடம் கேட்டார். அதற்கு அவர் சொன்ன பதில் இதுதான். தேசிய விருதைப் பெற்ற முதல் தமிழ் நடிகர் என்ற பெருமை எம்ஜிஆருக்கே சொந்தமானது.

2வது தமிழ் நடிகர்: 1971ல் இவர் நடித்த ரிக்ஷாக்காரன் படம் சிறந்த நடிப்புக்காகப் பெற்றது. அதைத் தொடர்ந்து 11 ஆண்டுகளுக்குப் பிறகு சிறந்த நடிகருக்கான தேசிய விருதைப் பெற்றவர் கமல். மூன்றாம்பிறை படத்தில் மிகச்சிறப்பாக நடித்ததற்காக 1982ல் அந்த விருது கமலுக்கு வழங்கப்பட்டது. 1972ல் சிறந்த நடிகைக்கான தேசிய விருதை வென்ற நடிகை லட்சுமி.

சிவாஜி கூட இல்லை: இவர் சில நேரங்களில் சில மனிதர்கள் என்ற படத்திற்காக இந்த விருதைப் பெற்றார். அவரைத் தொடர்ந்து அந்த விருதைப் பெற்றவர்னா அது நடிகை ஷோபா. பசி திரைப்படத்தில் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காகப் பெற்றார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். இப்ப தெரியுதா? எம்ஜிஆருக்குப் பிறகு அந்த விஷயத்துல யாருன்னு கேட்டா அது சிவாஜி கூட இல்லை. கமல்தான் வர்றாருன்னு தெரியுதா.

Next Story