இந்தியன் 2, கல்கி 2898AD படங்களோட... ஓடிடி ரிலீஸ் தேதி எப்போ தெரியுமா?

by ராம் சுதன் |

ஓடிடியின் அருமையை உலகிற்கு உரக்கக்சொன்ன பெருமை கொரோனா காலகட்டத்தையே சேரும். அந்த 3 ஆண்டுகளில் அப்படி ஒரு வளர்ச்சியை எட்டியது ஓடிடி தளங்கள். கொரோனாவுக்கு முன்னர் ஓடிடி ரிலீஸ் என்பது சாட்டிலைட் உரிமை போலத்தான் இருந்தது.

ஆனால் கொரோனா காலத்தில் நெட் பேக் போட்டு குடும்பம், குடும்பமாக மக்கள் குதூகலத்துடன் படம் பார்க்க அந்த டைமில் லாபம் பார்த்த நிறுவனம் என ஓடிடி தளங்களை நாம் தாராளமாக சொல்லலாம்.

விளைவாக இப்போது எல்லாம் ஓடிடி தளங்களை மனதில் வைத்துத்தான் படங்களுக்கான பூஜையே போடப்படுகின்றன. பார்க்கிங் தொல்லை, பாப்கார்ன் தொல்லை என எந்த தொல்லையும் இல்லாமல் நாம் விரும்புகிற நேரத்தில் படம் பார்க்கலாம் என்பது தான் இதன் மிகப்பெரிய பிளஸ்.

இதனால் இப்போது எல்லாம் வெள்ளிக்கிழமைகளில் ஓடிடி தளங்களும் புதிய படங்களை ரிலீஸ் செய்து மக்களை கவர்கின்றன. இப்படி புகழ் வாய்ந்த ஓடிடி தளத்தில் தற்போது திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டு இருக்கும் கல்கி 2898AD மற்றும் இந்தியன் 2 படங்கள் ரிலீஸ் ஆகவிருக்கின்றன.

அதன்படி ஆகஸ்ட் மாதம் அமேசான் பிரைமில் கல்கி 2898AD படமும் நெட்பிளிக்ஸ் தளத்தில் இந்தியன் 2 படமும் வெளியாகவுள்ளன. இதேபோல மலையாள படமான டர்போ சோனி லைவில் வெளியாகவிருக்கிறது.

கல்கி 2898AD, இந்தியன் 2 என இரண்டு படங்களிலுமே கமல் நடித்திருக்கிறார். அதோடு அடுத்ததாக கல்கி 2898AD படத்தின் 2-வது பாகம் மற்றும் இந்தியன் படத்தின் 3-வது பாகம் ஆகியவை கமல் நடிப்பில் வெளியாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story